பெற்றோர் வங்கி கடனை செலுத்தவில்லையா? பிள்ளைகளுக்கு கல்வி கடன் கிடையாது... சென்னை ஐகோர்ட் அதிரடி

வாங்கிய கடனை தந்தை திருப்பி
செலுத்தாததால் மகளுக்கு கல்விக் கடன் வழங்க மறுத்தது சரியே என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடன் கொடுத்துவிட்டு வசூலிக்க பின்னால் ஓடுவதை விட்டுவிட்டு, தகுதி இல்லாதவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது நல்லது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வாங்கிய கடனை தந்தை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்விக் கடன் வழங்க மறுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிர்பந்தங்களால் கடன் வழங்குவதால் மக்கள் பணம் வீணாகிறது. என்று கூறினார்.மாணவர்களுக்கு வழங்கப்படும் கடனை பெற்றோரால் திரும்பச் செலுத்த இயலுமா என வங்கிகள் ஆராய்ந்து கடன் வழங்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.
கடன் என்பது சிறியதோ, பெரியதோ அதனை வாங்குபவரிடம் வசூலிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் தகுதியை ஆரபாய்தல் சரியே என்று தெரிவித்துள்ளார்.
அழுத்தங்களால் வங்கிகள் கடன் கொடுக்கும் போது பொதுமக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படுவதோடு, வாங்குபவர் நாட்டை விட்டு சென்று விடுவதும் நடக்கிறது என உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.


-

2 Comments:

 1. கரீட் எசமான், கடன் வாங்கி பணம் திரும்ப செலுத்தாத மல்லையா மவனும், மிட்டல் மவளும்தான் வந்து பேங்குல படிக்க கடன் வாங்கப்போறாங்க! (அவனுங்ககிட்ட வசூலிக்க யோக்கிதை இல்லாம ஏய்யா ஏழைகள் வயத்திலடிக்கிறீர்கள்).

  ReplyDelete
 2. கல்விக்கடன் கொண்டு வந்ததன் நோக்கமே ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்க வழி வகுக்கும் என்பதற்காகத்தான்
  கடனை திரும்ப செலுத்த வழி அந்த மாணவ மாணவிகள் படித்து வேலைக்கு வந்து கடனை திருப்பி செலுத்துவது தான்

  அதை விடுத்து திரும்ப செலுத்த வழியில்லாதவர்களுக்கு கடன் வழங்கக்கூடாது என்பது விஷமத்தனம்

  ஏழை எளிய மக்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு கல்விக்கடன் வழங்குவதற்கு பதிலாக இலவச கல்வி வழங்க நீதிபதிகள் ஆணையிட வேண்டும்

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive