இந்திய மொழிகளில் இந்தி பேசுவோர் முதல் இடம் தமிழ் பேசுவோர் 5 வது இடம்

இந்திய மொழிகளில் இந்தி பேசுவோர் முதல் இடம் தமிழ் பேசுவோர் 5வது இடம்
சமஸ்கிருதம் பேசுவோர் மிக மிக குறைவு.
இந்திய மொழிகளில் இந்தியை 52,83,47,193 பேரும் சமஸ்கிருதத்தை 24,821 பேரும் பேசுகின்றனர் என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள்.  
கடந்த 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் இந்தி பேசுவர்களின் எண்ணிக்கை 41.03 சதவீதமாக இருந்தது. அது 2011 கணக்கெடுப்புபடி  43.63 சதவீதமா உயர்ந்து உள்ளது. பெங்காலி இரண்டாவது மொழியாக உள்ளது. மராத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில்  சமஸ்கிருத மொழி குறைந்தபட்சம் 22 திட்டமிடப்பட்ட மொழிகள் பேசப்படுகிறது. வெறும் 24,821 பேர் அதை தங்கள் தாய் மொழியாகக் குறிப்பிடுகின்றனர்,போடோ, மணிபுரி, கொங்கனி மற்றும் டோக்ரி மொழிகளில் பேச்சாளர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது. 
திட்டமிடப்படாத மொழிகளில், 2.6 லட்சம் மக்கள் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆங்கில மொழியை பட்டியலிட்டனர், இதில் 1.06 லட்சம் பேர் மகாராஷ்டிராவில் இருந்தனர். தமிழ் நாட்டில் ஆங்கிலத்தை தங்கள் தாய்மொழியாக பேசுபவர்கள் அதிகம் உள்ளவர்களில்  இரண்டாவது இடத்தில் உள்ளது, கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. 
ராஜஸ்தானில்  பேசப்படும் பில்லி / பிலொடி மொழி 1.04 கோடி பேசுபவர்களை   கொண்டதிட்டமிடப்படாத மொழியாக உள்ளது.  தொடர்ந்து கோண்டி 29 லட்சம் பேசுபவர்களை கொண்டதாக உள்ளது. 
பெங்காலி மொழியை  தாய் மொழி பேசுபவர்கள்   2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 8.11% ஆக  இருந்தது தற்போது அது மொத்த மக்கள் தொகையில் 8.30% ஆக உயர்ந்து உள்ளது. அடுத்த இடத்தில் மராத்தி மொழி உள்ளது. 
தமிழ் மொழியை தாய்மொழியாக பேசுபவர்கள்  மக்கள் தொகையில்  5.89% 5-வது இடத்தில் உள்ளது. கடந்த  2001 இல்  
இந்தியாவில் பேசப்படும் மொழிகளும் பேசுவோர் எண்ணிக்கையும்: 
இந்தி-52,83,47,193 (43.63%) 
பெங்காலி-9,72,37, 669 (8.30%) 
மராத்தி-8,30,36,680 (7.09%) 
தெலுங்கு-8,11,27,740 (6.93%) 
தமிழ்-6,90, 26, 881 (5.89%) 
குஜராத்தி-5,54,92,554 (4.74%) 
உருது-5,07,72,631 (4.34%) 
கன்னடா-4,37,06,512 (3.73%) 
ஒடியா-3,75,21,324 (3.20%) 
மலையாளம்-3,48,38,819 (2.97%) 
பஞ்சாபி-3,31,24,726 (2.83%) 
அஸ்ஸாமி-1,53,11,351 (1.31%) 
மைதிலி-1,35,83,464 (1.16%) 
சந்தாலி-73,68,192 (0.65%) 
காஷ்மீரி-67,97,587 (0.58%) 
நேபாளி-29,26,168 (0.25%) 
சிந்தி-27,72,264 (0.24%) 
டோக்ரி-25,96,767 (0.22%) 
கொங்கனி-22,56,502 (0.19%) 
மணிப்பூரி-17,61,079 (0.15%) 
போடோ-14,82,929 (0.13%) 
சமஸ்கிருதம்-24,821
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive