60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

ஆசிரியையுடன் சேர்த்து வைக்க மாணவன் அழுகை போராட்டம் - கல்வித்துறையில் அதிர்ச்சி!

குருவிடம் பாடம் கற்கபோன இடத்தில் கள்ளக்காதல் மலர்ந்ததாகவும்,
ஆசிரிையயை தன்னுடன் சேர்த்து வைக்ககோரியும் மாணவன் அழுத வினோத சம்பவம் குடியாத்தத்தில் நடந்துள்ளது.
 வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் மகன் உள்ளான். இளம்பெண் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனை அவரது பெற்றோர் கணக்கு பாடம் டியூசன் படிக்க ஆசிரியையிடம் அனுப்பினர்.
அப்போது ஆசிரியைக்கும், மாணவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர், தீவிர காதலர்களாக மாறியுள்ளனர். பள்ளி முடிந்ததும் இருவரும் நீண்ட நேரம் தனிமையில் பேசி வந்துள்ளனர். விடுமுறை நாட்களிலும் சந்தித்துள்ளனர். கடந்த மாதம் ஆசிரியை, தனது குழந்தையுடன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் பல இடங்களில் தேடியபோது மனைவி, மாணவனுடன் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் பெங்களூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு மாதம் கழித்து 2 பேரையும் கண்டுபிடித்தனர். பின்னர், அவர்களுக்கு அறிவுரை கூறி ஆசிரியையை அவரது கணவரிடமும், மாணவனை அவனது பெற்றோரிடமும் ஒப்படைத்தனர். ஆனாலும் எதிர்ப்புகளை மீறி இருவரும் தொடர்ந்து சந்தித்து வந்தனர்.
இதனால், ஆசிரியையின் கணவர், தனது மனைவியை அவரது தாய் வீடான குடியாத்தத்துக்கு அனுப்பி வைத்தார். இதையறிந்த அந்த மாணவன் தனது பெற்றோருக்கு தெரியாமல் நேற்றுமுன்தினம் குடியாத்தம் பகுதியில் உள்ள ஆசிரியை வீட்டை தேடி வந்துள்ளார். அப்போது ஆசிரியையின் பெற்றோர் அந்த மாணவனை பிடித்து குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அந்த மாணவனுக்கு குடியாத்தம் டவுன் போலீசார் அறிவுரை கூறினர். ஆனால் அந்த மாணவன், ‘ஆசிரியையுடன் என்னை சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ எனக்கூறி அழுது அடம்பிடித்து போராட்டம் நடத்தினான். இதனால் அவனை எச்சரித்து அவனது பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனர். ஆசிரியையிடம் பாடம் கற்க போன இடத்தில் கள்ளக்காதல் மலர்ந்தது என்று மாணவன் கூறிய சம்பவம், கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

3 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive