Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி விண்ணப்பங்கள் வரவேற்பு

ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில், பள்ளி,
கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிநடக்கிறது.

மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துகளைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், சிந்திக்கும் திறனைப் பெருக்கவும் கடந்த 1988ம் ஆண்டு முதல் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் தமிழகம் முழுவதும் திருக்குறள் போட்டியினை நடத்தி வருகிறது.
அதன்படி, புதுச்சேரி லாஸ்பேட்டை, கருவடிகுப்பம்பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டி வரும் ஜூலை 22ம் தேதி நடக்கிறது.
தவிர,சென்னை, மதுரை, நெல்லை, திருவாரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர் நகரங்களிலும் வரும் ஜூலை 21, 28, 29 மற்றும் ஆகஸ்ட் 4, 5, 11, 12, 18, 19 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறஉள்ளது.
இதில் பங்குபெற விரும்புவோர்,விண்ணப்பப் படிவத்தினை அருகிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளை அல்லது ஸ்ரீராம் சிட்ஸ், எண்: 145, சாந்தோம் நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி: 044 - 4021 4100 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது www.shriramchits.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூலை 17ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
போட்டிகள் இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என மூன்று பிரிவுகளாக நடக்கிறது.
இடைநிலைப் பிரிவில் 6,7, 8ம் வகுப்பு; மேல்நிலையில் 9, 10, 11,12ம் வகுப்புகள்; கல்லூரிப் பிரிவில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive