NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிதாக 264 பாடப்பிரிவுகள் அரசு கல்லூரிகளில் துவக்கம் - அரசாணை வெளியீடு.

தமிழகத்தில், 61 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பாண்டு,
264 புதியபாடப்பிரிவுகளை துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.முதல்வர் பழனிசாமி, சட்டசபையில், 110 விதியின் கீழ்,
'2018 - 19ம் கல்வியாண்டில், கல்லுாரிகளில், 264 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.
 இவற்றை கையாள, 693 உதவி பேராசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும்' என, ஏற்கனவே அறிவித்தார்.அதன்படி, நடப்பு கல்வியாண்டில், 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.பில்., 71 பிஎச்.டி., என, 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும், அவற்றை கையாள, 693 உதவி பேராசிரியர் பணியிடங்களில், முதலாம் ஆண்டு, 270 உதவி பேராசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி, ஜூன், 22ல், அரசாணை வெளியிடப்பட்டது.
புதிய பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல், அரசாணையில் குறிப்பிடப்பட்ட கல்லுாரிகளில் வழங்கப்படும். அவற்றை பூர்த்தி செய்து, ஜூலை, 9க்குள், கல்லுாரியில் சமர்ப்பிக்க வேண்டும். புதிய பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்லுாரிகள்விபரம் அடங்கிய அரசாணையை, தமிழக அரசின், www.tn.gov.in என்ற இணையதளத்தில், உயர் கல்வித்துறை பக்கத்தில் பார்க்கலாம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive