புத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம் - கர்நாடக தொடக்கக்கல்வி அமைச்சர்!

வருங்காலங்களில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதும் முறை
கொண்டுவரப்படும் என்று கர்நாடக அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். மஜத கூட்டணியில் இருந்த சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மகேஷ் என்பவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தொடக்க கல்வி அமைச்சராக மகேஷ் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், சாம்ராஜ் நகரில் நடந்த மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அமைச்சர், ஒரு கருத்தை தெரிவித்தார்.
பல துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் புத்தகத்தை பார்த்து குறிப்புகள் எடுக்கின்றனர். ஆனால், மாணவர்கள் மட்டும் ஏன் புத்தகத்தை பார்க்காமல் தேர்வு எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். விரைவில், தொடக்க மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு நடக்க இருக்கும் தேர்வுகளில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும்.
அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த நடைமுறை கொண்டுவரப்படும்.
இதுகுறித்து பல நிபுணர்களிடமும், மனோதத்துவ மருத்துவர்களிடமும் ஆலோசித்து வருவதாகவும் மேடையில் பேசினார். இந்த பேச்சு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive