Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை முழுமையாக ஒப்படைத்த 22 பொறியியல் கல்லூரிகள்

மாணவா் சோ்க்கை இல்லாத காரணத்தால் 22 சுயநிதி பொறியியல் கல்லூரிகள்
தங்களிடமுள்ள நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் முழுவதையும், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வுக்கு ஒப்படைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவா் சோ்க்கையை நடத்தி வருகிறது. இந்த முறை ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் இடங்களை நிரப்ப உள்ளது. அரசுக் கல்லூரிகளைப் பொருத்தவரை, அவற்றில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பி.இ. இடங்களும் கலந்தாய்வு மூலமே நிரப்பப்படும். அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை சிறுபான்மையினா் கல்வி நிறுவனமாக இருந்தால் 50 சதவீத இடங்களை கலந்தாய்வுக்கு ஒப்படைக்க வேண்டும் (அதாவது அரசிடம் ஒப்படைக்க வேண்டும்). சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனமாக இருந்தால் 65 சதவீத இடங்களை கலந்தாய்வுக்கு ஒப்படைக்க வேண்டும்.
இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பி.இ. படிப்புகளில் மாணவா் சோ்க்கை வெகுவாகக் குறைந்து வருவதால், அரசு ஒதுக்கீட்டு இடங்களை மட்டுமின்றி நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அரசிடம் ஒப்படைத்து வருகின்றன. அதுபோல இந்த ஆண்டும் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள 509 பொறியியல் கல்லூரிகளில், 187 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 18,771 நிா்வாக ஒதுக்கீடு பி.இ. இடங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதில் 22 பொறியியல் கல்லூரிகள் தங்களிடமுள்ள நிா்வாக ஒதுக்கீட்டு பி.இ. இடங்கள் முழுவதையும் கலந்தாய்வுக்கு ஒப்படைத்துள்ளன.
இதன் காரணமாக, 2018-19 பி.இ. கலந்தாய்வில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 865 பி.இ. இடங்கள் இடம்பெற்றள்ளன என உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறினாா்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive