அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு பி.எட் 2ம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் 4ம் தேதி வரை நடக்கிறது.

பி.எட் படிப்பிற்கான கல்வியகம்
வெளியிட்ட அறிக்கை: பி.எட். சேர்க்கைக்கு அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இடத்துக்கான சேர்க்கை இன்று முதல் 4ம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு  விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற உள்ளது
விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன இணைய தளத்தில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது
காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. ேமலும் இன்று (2ம் தேதி) தாவரவியல், விலங்கியல்,  தமிழ், ஆங்கிலம், இயற்பியல், 3ம் தேதி வரலாறு, புவியியல், கணிப்பொறி அறிவியல், பொருளியல், வணிகவியல், 4ம் தேதி வேதியியல், கணிதம் ஆகிய பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Share this

0 Comment to "அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு பி.எட் 2ம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் 4ம் தேதி வரை நடக்கிறது."

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...