நாட்டின் 72-வது சுதந்திர தின விழா - முதல்வர் வாழ்த்துச்செய்தி!
இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கவும் அனைவரும் உழைக்க வேண்டும் என சுதந்திர வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 72-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் விடுதலைப் போராட்ட தியாகிகளைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அவர்களின் பிறந்தநாள் அன்று தமிழக அரசின் சார்பில் விழா கொண்டாடப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றவும் அனைவரும் சாதி, மதங்களை கடந்து உழைக்க வேண்டும் என முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this

0 Comment to "நாட்டின் 72-வது சுதந்திர தின விழா - முதல்வர் வாழ்த்துச்செய்தி!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...