சாதாரண படுக்கை வசதிகள் ஏசியாக மாற்றம்: தெற்கு ரயில்வே எடுத்திருக்கும் அதிரடி முடிவு!

சாதாரண படுக்கை வசதிகளை
ஏசி படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளாக மாற்றி வருவாயைக் கூட்ட தெற்கு ரயில்வே அடுத்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் மூலம் சாதாரண படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுக்கு கொடுத்து வந்த கட்டணத்தை விட ரூ.500 முதல் ரூ.800 வரை கூடுதல் கட்டணத்தை பொதுமக்கள் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயிலில் இதுவரை இருந்த 864 படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 702 ஆகக் குறைக்கப்படுகிறது. இதுவரை 12 பெட்டிகளுடன் 864 படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுடன் இயங்கி வந்த பாண்டியன் விரைவு ரயிலில் 9 புதிய பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

Share this

0 Comment to "சாதாரண படுக்கை வசதிகள் ஏசியாக மாற்றம்: தெற்கு ரயில்வே எடுத்திருக்கும் அதிரடி முடிவு!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...