இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 7.30 மணியளவில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு நீண்ட உரை நிகழ்த்தினார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9.15 மணியளவில் முதல்வர் கே.பழனிசாமி, மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் பேசும்போது, “சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம் தான். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தேசியக்கொடியை 2-வது முறையாக ஏற்றியதை பெருமையாக கருதுகிறேன். சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
வெள்ளையர்களுக்கு எதிராக வேலூரில் இருந்து புரட்சி தொடங்கியதை எண்ணி பெருமை கொள்வோம். ஜெயலலிதா வழியில் அரசு ஏழைகளுக்காக பாடுபட்டு வருகிறது. காவிரி நதி நீரை போராடி பெற்று தந்தது ஜெயலலிதா அரசு. அனைவருக்கும் தரமான கல்வி அளிக்க உறுதி பூண்டுள்ளோம். உயர்கல்வி சேர்க்கை 48 சதவீதம் அதிகரித்துள்ளது. சட்டப்போராட்டத்தின் விளைவாக காவிரிமேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மையை பின்பற்றும் உன்னத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பேசினார்.
முன்னதாக, போர் நினைவுச் சின்னத்தில், மறைந்த வீரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, புனித ஜார்ஜ் கோட்டை முன் வரும் முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அறிமுகப்படுத்திவைத்தார். தொடர்ந்து, அவர் திறந்த ஜீப்பில் ஏறி முப்படையினர், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அதன்பின் கோட்டை கொத்தளத்துக்கு சென்ற முதல் அமைச்சர் பழனிசாமி, தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...