மதுரை: "புதிய பாடப் புத்தகங்களில் உள்ள குறைபாடுகள்
மறுபதிப்பில் சரிசெய்யப்படும்," என பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:தமிழக கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கு பின் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டாலும் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாடப் புத்தகங்களை கற்பிக்கும் ஆசிரியர்களிடம் அதில் உள்ள குறைகள் குறித்து தமிழகம் முழுவதும் கருத்துக்களும், மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் பெறப்படுகின்றன.பல ஆலோசனைகள் கிடைத்துள்ளன. விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதன் அடிப்படையில் குறைபாடுகள் மறுபதிப்பில் சரிசெய்யப்படும். குறிப்பாக, பிளஸ் 1 தாவரவியல், விலங்கியல் பாடப் புத்தகங்களில் அதிக பக்கங்கள் உள்ளதாகவும், முழுமையாக நடத்த முடியவில்லை என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். இதை பாடங்களாக ஆசிரியர்கள் பார்க்காமல் மாணவர்கள் எதிர்கால நலன்சார்ந்ததாக கருதி அர்ப்பணிப்புடன் கற்பிக்க வேண்டும். புதிய பாடத்திட்டத்தின் வெற்றி ஆசிரியர்கள் கைகளில் தான் உள்ளது என்றார். இணை இயக்குனர் பொன்குமார், முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் உடனிருந்தனர்.
புதிய பாடத்திட்டத்தில் 11, 12ம் வகுப்புகளில் கணினி பாடம் 1.கணினி அறிவியல். 2.கணினி பயன்பாடு 3.கணினி தொழில்நுட்பம் ஆகிய மூன்று பிரிவுகளில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. 6000 அரசு மேல்நிலை பள்ளிகளில் 1880 பள்ளிகளில் மட்டுமே கணினி ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக பணியில் அமர்த்த பட்டுள்ளனர். மேலும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் இப்பாடங்களை அறிமுகம் செய்து 4000 மேற்பட்ட புதிய பணியிடங்களை தோற்றுவித்து, இப்பாடங்களை திறன்பட கற்பிக்க தகுதியுடைய பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகளை பணியில் அமர்த்த தக்க நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுக்க வேண்டுகிறோம். 7, 8 வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடப்புத்தகங்கள் வெளிவரஉள்ளன இந்த வகுப்புகளுக்காவது கணினி பாடத்தை தனி படமாக கொண்டுவர வேண்டும். அறிவியலில் சேர்த்துள்ளது மாணவர்களுக்கு எந்த வகையிலும் கணினி கல்வி சென்றடையாது. கணினி ஆய்வகங்களை மேம்படுத்தி தனியார் பயிற்றுனர்களை தவிர்த்து 53000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர் இவர்களை பணியில் அமர்த்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ReplyDeleteஇப்படிக்கு.
சை.புருஷோத்தமன்.
மாநில துணை செயலாளர்.
பி.எட் கணினி அறிவியல் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நலசங்கம்.
பதிவு எண் : 127/2016.