துணை கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

பிளஸ் 2 துணை தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, துணை கவுன்சிலிங் பதிவு அறிவிக்கப்பட்டது. துணை கவுன்சிலிங் நடத்தப்படும் தேதிகளை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

இதன்படி, வரும், 23 மற்றும், 24ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். தரவரிசை பட்டியல், 24ல், வெளியிடப்படும்.பின், 25, 26ம் தேதிகளில், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, கவுன்சிலிங் நடக்கும். அதேநேரத்தில், 26ல், தொழிற்கல்வி மற்றும், பி.ஆர்க்., மாணவர்களுக்கும், 27ல், அருந்ததியர் பிரிவு காலியிடங்களில், ஆதிதிராவிடர் பிரிவினருக்கும், தனியாக துணை கவுன்சிலிங் நடக்கஉள்ளது.இதேபோல், எம்.இ., - எம்.டெக்., மற்றும், எம்.ஆர்க்., படிப்பில் சேர, 'கேட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 28ல், கவுன்சிலிங் நடக்கும். தமிழக இன்ஜி., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், மாற்று திறனாளி ஒதுக்கீட்டுக்கு, 28ம் தேதியும், மற்றவர்களுக்கு, 29 முதல், 31ம் தேதி வரையிலும், கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this