அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி M.Phil Part Time படிப்பது குதிரைக் கொம்பு போல...!

இனிவரும் காலங்களில் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் பகுதி நேரத்தில் எம்பில் படிப்பதற்கு அவர்கள் வேலை செய்யக்கூடிய பள்ளியானது எந்த பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டதோ அந்தப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே படிக்க முடியும்.
உதாரணமாக பெரியார் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு வேலூர் மாவட்டத்தில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் எம்பில் படிப்பதற்கு அனுமதி இல்லை என்று பல்கலைக்கழகம் அறிவித்துவிட்டது.
இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்துவிட்டது .ஆனால் இது அறிவிப்பு Notification வெளிவிடும் போது சொல்லாமல் Entrance exam எழுதி அந்த கல்லூரிக்கு விண்ணப்பித்து கவுன்சிலிங் என்ற முறைக்கு சென்ற பிறகு அங்கு இந்த செய்தியை சொல்லி அனுப்பியது வருத்தத்திற்குரியது. ஆகவே இந்த வருடம் இந்த NORMS எடுக்கும்படி  ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்

Share this

0 Comment to " அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி M.Phil Part Time படிப்பது குதிரைக் கொம்பு போல...!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...