NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB - தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 845 பேர் தகுதி சிறப்பாசிரியர் பணி இடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி மாவட்ட தலைநகரங்களில் நடந்தது!




ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கு தமிழகம்  முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், சென்னை,கோவை மாநகராட்சி  பள்ளிகள், சமூக பாதுகாப்புதுறை பள்ளிகளில் தையல், ஓவியம்,உடற்கல்வி, இசை, ஆகிய பாடப்பிரிவுகளில் 1325 சிறப்பாசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன.
இவற்றை நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்  கடந்த 23.09.2017ல் போட்டி தேர்வு நடந்தது. இத்தேர்வை 35 ஆயிரத்து 781 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த மாதம் 27ம் தேதி வெளியிடப்பட்டது.2 கட்டமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவு பட்டியலையும் சேர்த்து தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்று  இருந்தனர். இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று நடந்தது.ஒரு காலி இடத்திற்கு 2 பேர் வீதம்  அழைக்கப்பட்டனர். 
நெல்லை மாவட்டத்தில் பாளை சாராள்தக்கர் பள்ளியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக 129 பேர் அழைக்கப்பட்டனர். இதற்கான அழைப்பு கடிதத்தை இணையத்தில் பெற்ற தகுதியான நபர்கள், தங்களது  உண்மை சான்றிதழுடன் வருகை தந்தனர். பணியை கல்வித்துறை இணை இயக்குநர் நரேஷ் நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன்,  கல்வி மாவட்ட அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் பணியை ஒருங்கிணைத்து நடத்தினர்.




3 Comments:

  1. cv correct a erunthu super

    ReplyDelete
  2. சான்றிதழ் சரிபார்ப்பு எப்படியும் நடக்க விடக்கூடாது என்பது கலைஆசிரியர் சங்க தலைவர் விருப்பம் சரியா?

    ReplyDelete
  3. What is mean 1:2 in this post

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive