பிரதமர் நரேந்திர மோடி, ஒரு மனிதரை விண்வெளிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவித்த 90 நாட்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான (இஸ்ரோ), குறைந்த பூமி கோளப்பாதையில் (LEO) இந்திய விண்வெளி வீரர்களை கொண்டு நடத்தப் போகும் ஆய்வுகளின் சுருக்கமான பட்டியலை வெளியிட்டு உள்ளது.
உயிரியல் காற்று வடிகட்டிகள் மற்றும் பயோ சென்சர்கள், மற்றும் உயிர் ஆதரவு மற்றும் உயிரியல் கழிவு மேலாண்மை ஆகியவற்றிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்களை கண்காணிப்பதற்கான மைக்ரோ-உயிரியல் பரிசோதனைகளுக்கான மருத்துவ உபகரணங்களை பரிசோதனை என குறைந்தபட்சம் 10 பரிசோதனைகளையாவது நிகழ்த்திவிட வேண்டும் என்று இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
10 என்றால் 10 பகுதிகளில் மட்டும்மல்ல, இன்னும் நீளும்!
நாங்கள் ஆர்வமாக உள்ள 10 பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளோம், அதற்காக இந்த பகுதிகளில் மட்டும் தான் சோதனைகளை செய்வோம் என்று அர்த்தமில்லை" என்று ஒரு ஐஎஸ்ஓ அதிகாரி கூறியுள்ளார். "மேலும், இந்த பட்டியலிடப்பட்டுள்ள பகுதிகளில் நடக்கும் குறிப்பிட்ட சோதனைகளுக்காக இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து உதவிகளை பெறுவோம்," என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
உள்ளீடுகள் தேவைப்படுகிறது!
சமீபத்தில், குறைந்த பூமி கோளப்பாதை (லியோ) அடிப்படையிலான மைக்ரோ-ஈர்ப்பு சோதனைகளுக்கான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டதும், "இஸ்ரோ ஒரு மனித விண்வெளித் திட்டத்தைத் திட்டமிடுவதுதால், குறைந்த பூமி கோளப்பாதையில் உள்ள நுண்ணிய ஈர்ப்பு மண்டலத்தில் சோதனைகளை நடத்த, தேசிய அறிவியல் சங்கத்திலிருந்து உள்ளீடுகள் தேவைப்படுகிறது," என்று இஸ்ரோ கூறி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
முற்றிலும் புதிய கருத்தையும் முன்மொழியலாம்!
குறைந்த பூமி கோளப்பாதையின் மைக்ரோ ஈர்ப்பு தளங்களில் நிகழ்த்தப்பட உள்ள குறிப்பிட்ட சோதனைகள் ஆனது சாத்தியமான குறுகிய காலத்திற்கான - ஒன்று முதல் ஏழு நாட்களுக்குள் - செயல்பாடுகளை கொண்டதாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அல்லது, விஞ்ஞானிகள் நுண்ணிய ஈர்ப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அல்லது தேவைப்படும் ஒரு முற்றிலும் புதிய கருத்தையும் முன்மொழியலாம் என்றும் அறிவித்துள்ளது.
பூமியில் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்கும்!
மேலும், சோதனைக்காக முன்மொழியப்பட்ட சுற்றுப்பாதையானது பூமிக்கு சுமார் 400 கிமீ உயரத்தில் உள்ள பூமியின் எல்லைக் கோளப்பாதை ஆகும் என்றும், சோதனைகள் நடத்தப்படும் உறைவிடம் ஆனது, சாதாரண அறை வெப்பநிலை (தற்காலிகமாக 0-4 டிகிரி செல்சியஸ்) மற்றும் அழுத்தம் நிலைகளை (தற்செயலாக கடல் மட்டத்தில் ஒரு வளிமண்டல அழுத்தத்தை சுற்றிய) கொண்டிருக்கும், அதாவது பூமியில் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்கும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
பயணம் தொடங்கும் போதும், திரும்பும் போதும்!
இருப்பினும், உறைவிடத்திற்கு வெளியே வைக்கப்பட வேண்டிய பேலோடுகள் ஆனது இயல்பான விண்வெளி சூழலுக்கு உட்பட்டிருக்கும். அதாவது - வெப்பம், வெற்றிடம் மற்றும் கதிர்வீச்சு ஆகியவைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பதால், சோதனைகளுக்காக வடிவமைக்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆனது தொடக்கம் மற்றும் திரும்பும் போது ஏற்படும் அதிர்வு மற்றும் ஒலியியல் சுமைகளை தாங்க கூடியதாக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
தேவைப்பட்டால் தரையில் இருந்து கட்டளைகள்!
இந்த சோதனைகளுக்காக இஸ்ரோ இரண்டு விதமான பேலோடுகள் / கருவிகளை - உள் மற்றும் வெளிப் -த் திட்டமிடுகிறது. இதன் வழியாக தொலைதூர சோதனைகளை நடத்துவதற்கான விருப்பமும் கிடைக்கும். தேவைப்பட்டால் அவர்கள் தரையில் இருந்து கூட கட்டளைளை நிகழ்த்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திட்டத்தின் செலவு மதிப்பீடு என்ன?
இதற்காக உருவாக்கம் பெறும் மனித விண்வெளி வானூர்தி திட்டம் ஆனது, சுமார் 10,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, பல்வேறு இஸ்ரோ ஆய்வகங்களில், பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் மற்றும் துணை அமைப்புகள் சார்ந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆயுட்காப்பு மற்றும் மனித-மதிப்பீட்டு முறைமைகள் போன்ற பல முக்கிய துறைகளிலும் வேலைகள் நடைபெறுகின்றன. இதற்கான ராக்கெட் (லான்ச் வெயிக்கில்) சார்ந்த பணிகள் அடுத்த சில மாதங்களில் பிரதான கவனத்தினை பெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...