பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.11.18

திருக்குறள்


அதிகாரம்:இனியவைகூறல்

திருக்குறள்:98

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

விளக்கம்:

சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

பழமொழி

Birds of the same feather flock together

இனம் இனத்தொடு சேரும்.

இரண்டொழுக்க பண்பாடு

* விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களை துன்புறுத்த மாட்டேன்.

* பாரதியாரின் கூற்றுப்படி எல்லா உயிரிகளிடத்திலும் அன்பு செலுத்துவேன்

 பொன்மொழி

உண்மையான மகிழ்ச்சி நல்ல சிந்தனைகளுடன் தூய்மையாக வாழும் போதும்,நல்ல செயல்களைச் செய்து முடித்த போதும்தான் வரும்.

    - பிராங்க்ளின்

பொது அறிவு

1.கிர்  சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது?

 குஜராத்

2.  இந்தியாவில் உள்ள மிகப் பெரிய விலங்குகள் சரணாலயம் எது?

 சென்னை ,அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

பெருங்காயம்
1. வெப்பத் தன்மையானது. அஜீரணத்தையும் உடல் வலியையும் கட்டுப்படுத்தும்.

2. உணவுக் குழலில் ஏற்படும் கடுமையான வலியைக் கட்டுப்படுத்தி சுவாசம், நரம்பு மண்டலம் ஆகியவற்றைத் தூண்டும். நிமோனியா, குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுக் குழல் அழற்சி ஆகியவற்றை நீக்கும்.

3. பெருங்காயத்தை அதிக அளவில் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண், கழிச்சல், வயிற்று உப்புசம், சிறுநீர் எரிச்சல் புளியேப்பம் போன்றவற்றை உண்டாக்கும்.

English words and meaning

Diadem.     மகுடம்
Deplore.      வருந்து
Derange.     குழம்பு
Dangle.       தொங்கு
Dusk.         அந்தி

அறிவியல் விந்தைகள்

தும்பிச் சிட்டு

* உலகின் மிகச் சிறிய பறவை. ஆங்கிலத்தில் ஹம்மிங் bird என்று அழைக்கப்படும்.
* மேலே, கீழே, பக்கவாட்டில் என்று அனைத்து பக்கத்திலும் பறக்கும் திறமை பெற்றது. மேலும் நடு வானில் நின்று பறக்கும் திறமை வாய்ந்தது.
* ஒரு நிமிடத்தில் 200 முறை இறக்கைகளை அடிக்கும்.

நீதிக்கதை

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார்.

 ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.

தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

 நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது.

 நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

 “நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.

“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.

அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.

“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.

“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.

“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம்.

என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன்.

 அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான்.

லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து

உலகம் புகழும்
பெனிசிலின்
கண்டுபிடித்த
 *சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங்* ஆனார்.*

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது

 பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.

அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?

*சர் வின்ஸ்டன் சர்ச்சில்!*

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

 நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.
வாழ்க்கையில்

இன்றைய செய்திகள்

15.11.18

* ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து  ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில்  ஏவப்பட்டது.

* பொள்ளாச்சி ரயில்வே அதிகாரிகள், ஸ்டேஷன் வளாகத்தில் நுாற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறனர். இத்திட்டத்துக்கு, பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டுவதால், 'ரயில்வே சோலை' உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

* குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகள்  வெளியிடப்பட உள்ளன. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், அவற்றை மறுத்து இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க முடியும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

*  இன்று முதல் 24-ஆம் தேதி வரை உலக குத்துச்சண்டை போட்டி புது தில்லியில் நடக்கிறது.

* ரஞ்சி கோப்பை கிரிக்கெட் குரூப் பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழகத்துக்கு எதிராக ஹைதராபாத் அணி 523/7 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது.

Today's Headlines

🌻 The GSLV Mark-3 rocket was successfully launched from Satish Dhawan Space Center in Sriharikota.

🌻Pollachi railway authorities maintain nurseries on the station premises. With this support, there is hope that the support of the various parties will be lead this station to become  'Railways oasis'

 🌻Estimated answers to Group 2 Exams is to be released. If there are any objections to these answers, the Tamil Nadu State Employee Examination (TNPCC) has announced that the applicants can only apply to the relevant resources in the website.

🌻From today to 24th, World Boxing Tournament will be held in New Delhi.

🌻In the Ranji Trophy  Group A match against the Hyderabad team Tamilnadu is in a strong position with 523/7.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Share this

0 Comment to " பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.11.18"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...