பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேசியத் திறனாய்வு தேர்வு: 1.59 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (என்டிஎஸ்இ-நிலை 1) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் இத்தேர்வினை 1 லட்சத்து 59,030 தேர்வர்கள் 505 மையங்களில் எழுதவுள்ளனர். காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை மனத்திறன்(MAT) தேர்வும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை படிப்பறிவுத் தேர்வும் (SAT) நடைபெறும். காலை 11 மணி முதல் காலை 11.30 மணி வரை இடைவேளை.
தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக (காலை 8 மணிக்கு) தேர்வு மையங்களில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்

Share this