அரசு அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சேர்த்த கலெக்டர்உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்ட கலெக்டர், தன், 2 வயது மகனை, தனியார் மழலையர் பள்ளியில் சேர்க்காமல், அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்ட கலெக்டராக உள்ள, ஸ்வாதி, தன் மகன் அப்யுதயை, கோபேஷ்வர் நகரில் உள்ள, அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். இவரது கணவர், நிதின் பதோரியா, அல்மோரா மாவட்ட கலெக்டராக உள்ளார்.
இதுகுறித்து ஸ்வாதி கூறியதாவது: அங்கன்வாடி மையத்தில், அனைத்து வசதிகளும் உள்ளன. மற்ற குழந்தைகளுடன் பேசி, பழகி, ஒன்றாக அமர்ந்து உணவருந்த முடியும். எதிர்காலத்தில், பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி, அனைவருடன் எளிதாக பழகுவதற்கு, இது உதவும். அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதன் மூலம், அரசு அங்கன்வாடி மையத்தை பற்றிய மக்களின் அணுகு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இவ்வாறு, அவர் கூறினார்

Share this

2 Responses to "அரசு அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சேர்த்த கலெக்டர்"

Dear Reader,

Enter Your Comments Here...