ஒரு கோடிக்கும் அதிகமான வடிக்கையாளர்களுக்கு
டிசம்பர் 1 முதல் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து செய்யப்படவுள்ளது, கரணம் அவர்கள் யாரும் இன்னும் கேஒய்சி சரிபார்க்கவில்லை. மத்திய அரசு எல்பிஜி நிறுவனங்களான பாரத் கேஸ், எச்பி மற்றும் இண்டேன் இடம் நவம்பர் 30-க்குள் வாடிக்கையாளர்களிடம் கேஒய்சி பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மானியம் பெற்ற வாடிக்கையாளர்களும் கேஒய்சி சமர்ப்பிக்க வேண்டும். இதில் கூத்து என்னவென்றால் இன்னும் வெகுஜன மக்கள் பலர் கேஒய்சி ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை.
ஆதார்
அரசு முக்கியமாக யார் எல்லாம் ஆதார் சமர்ப்பிக்கவில்லை மற்றும் மானியம் விட்டுத்தர முன்வந்தார்களோ அவர்களுக்கு எல்லாம் கேஓய்சி சரிபார்க்க எல்பிஜி முகவர்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கி கணக்கு
மூன்று வருடங்களுக்கு முன்பு எல்பிஜி இணைப்பை வங்கி கணக்குடன் இணைக்க அரசு உத்தரவு இட்டபொழுது பலர் கேஒய்சி பூர்த்திசெய்யவில்லை, இதனால் அவர்களுக்கு மானியம் கிடைக்கவில்லை அது போக ஆண்டிற்கு 10 லட்சம் மேல் சம்பாத்தியம் உள்ளவர்களுக்கும் மானியம் கிடைக்கவில்லை.
மானியம்
அரசு தரப்பில் யாரெல்லாம் மானியம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்களோ அவர்களின் கேஒய்சி மூலம் அந்தத் தகுதியற்ற வாடிக்கையாளர்களை நீக்க முடியும். அது போக அவர்களுக்கு எரிவாயு சப்ளை செய்வது மேம்படுத்தப்படும்.
கேஒய்சி
ஒரு கோடிக்கும் அதிகமானோர் இன்னும் கேஒய்சி சமர்ப்பிக்கவில்லை, இதில் முக்கியமாக டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...