உலகமெங்கிலும் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களில்
48 மணி நேரத்திற்குள் பாஸ்போர்ட்களை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. கே. சிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் 'பாஸ்போர்ட் சேவா' என்ற திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் வி. கே. சிங், நிகழ்ச்சியில் பேசும்போது, இந்திய தூதரகங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள், டிஜிட்டல் முறையில் தரவு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இது பாஸ்போர்ட்டை வெளியிடுவதற்கான செயல்முறையை துரிதப்படுத்தும், என கூறினார்.
இந்த வார தொடக்கத்தில், நியூயார்க்கில் இந்திய தூதரகத்தில் உள்ள அலுவலகங் களில் 48 மணி நேரத்திற்குள் பாஸ்போர்ட்களை வழங்கி வருகிறது. வரும் நாட்களில், உலகில் சிறந்த பாஸ்போர்ட் சேவைகளை இந்தியா அளிக்கும் என சிங் உறுதி அளித் தார். மேலும் அவர் கூறுகையில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்தி இருப்பதாகவும், விண்ணப்பதாரர்களின் அனைத்து தகவல்களும் டிஜிட்டல் முறையிலேயே சரி பார்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
'பாஸ்போர்ட் சேவா' திட்டம், கடந்த மாதம், இங்கிலாந்தில் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. அமெரிக்காவில், இந்த திட்டம் நவம்பர் 21-ம் தேதி நியூயார்க்கில் முதல் முறையாக உருவானது.
இதன் பின்னர், அட்லாண்டா, ஹௌஸ்டன், சிகாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் இந்திய தூதரகங்களில் தொடங்கப்படும். அடுத்த சில மாதங்களில், இந்திய அரசாங்கம் ஒரு புதிய பாஸ்போர்ட் தொகுப்பு ஒன்றை வெளியிடுமென அமைச்சர் தெரிவித்தார். இதன் வடிவமைப்பிற்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
புதிய பாஸ்போர்ட்டுகள், அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களையும் சிறந்த அச்சிடுதல் மற்றும் காகித தரத்தையும் கொண்டிருக்கும். இருப்பினும், 'இந்திய பாஸ்போர்ட்டின் நிறத்தில் மாற்றமில்லை,' என்று அவர் தெளிவுபடுத்தினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...