புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி, டிச., 4 முதல், காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட, ஜாக்டோ - ஜியோ
கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்,
சுப்ரமணியன், நேற்று மதுரையில் கூறியதாவது:'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து
செய்ய, குழு அமைத்து, பரிசீலித்து முடிவு செய்யப்படும்' என, மறைந்த
முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதற்காக அமைக்கப்பட்ட குழு, அறிக்கை
அளிக்கவில்லை. அறிக்கை அளிக்கப்படும் முன்பே, சேலத்தில், முதல்வர்
பழனிசாமி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய முடியாது எனக் கூறியது,
சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.மேலும், சம்பள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட
சித்திக் குழுவின் காலம், அக்., 31ல் முடிந்து விட்டது. அக்குழு
நீடிக்கப்பட்டுள்ளதா என, இதுவரை அறிவிப்பு இல்லை. சத்துணவு, அங்கன்வாடி,
ஊராட்சி ஊழியர்களுக்கு, சிறப்பு காலமுறை சம்பளத்தை ரத்து செய்து, காலமுறை
சம்பளம் வழங்குவதும் தள்ளிபோகிறது.எனவே, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
நவ., 25ல், மாவட்ட தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு; நவ., 26 முதல், 30
வரை, பிரசார இயக்கம்; நவ., 30ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்; டிச.,
4 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்த, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு முடிவு
செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» டிச., 4 முதல், 'ஸ்டிரைக்' : ஜாக்டோ- - ஜியோ முடிவு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...