வேலைக்கு சேர்ந்தவுடன் ஒருவர் திட்டமிட்டு
சேமித்தால்,
நம்முடைய வருமான வரியை ஓரளவிற்கு குறைக்க முடியும். இன்றைக்கு பணம் சம்பாதிக்கும் பலருக்கும் 80 சி பிரிவு பற்றி தெரிந்திருக்கும். அதே நேரத்தில் எந்தெந்த திட்டங்களின் கீழ் சேமித்தால் வருமான வரி விலக்கு பெற முடியும் என்று தெரிவதில்லை.
நம்முடைய வருமான வரியை ஓரளவிற்கு குறைக்க முடியும். இன்றைக்கு பணம் சம்பாதிக்கும் பலருக்கும் 80 சி பிரிவு பற்றி தெரிந்திருக்கும். அதே நேரத்தில் எந்தெந்த திட்டங்களின் கீழ் சேமித்தால் வருமான வரி விலக்கு பெற முடியும் என்று தெரிவதில்லை.
வருமான வரிப்பிரிவில் 80 சி பிரிவை
தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒன்றரை ரூபாய்வரை
சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு
நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரையாகும்.
நம்முடைய அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ்
பிரிவில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்வதில் இருந்து விலக்கு
அளிப்பதற்காகவே சில ரசீதுகளைக் கேட்பார்கள். குழந்தைகளின் கல்விக்கட்டணம்,
எல்ஐசி முதலீடுகள், மியூட்சுவல் பண்ட், கட்டுவதற்கான ரசீதுகளை அனுப்பினால்
வரி பிடித்தம் குறைவாக இருக்கும். இல்லையெனில் நாம் வாங்கும் சம்பளத்தில்
வரி இவ்வளவு கட்ட வேண்டுமா என்று யோசித்தே மண்டை குழம்பிவிடும். வரி
சேமிப்புக்கான திட்டங்களை படித்து அதில் முதலீடு செய்யுங்கள்.
நாம் சேமிக்கக்கூடிய திட்டங்களில் அதனுடைய
கால அவகாசம், அதற்கு கிடைக்கும் வருமானம் பார்த்து நாம் வருட ஆரம்பத்திலேயே
திட்டமிட்டால், வருமான வரி கட்டுவதை ஓரளவுக்கு குறைக்க முடியும். சிறிது
சிறிதாக சேமிக்கக்கூடிய தொகை நாளடைவில் நல்ல பலன் தரும். நாம் வாங்கும்
சம்பளத்தில் முதல் செலவே நமது சேமிப்புதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
தேசிய ஓய்வூதிய சிஸ்டம் ( என்பிஎஸ்)
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தது 500
ரூபாய் பங்களிக்க வேண்டும், ஆண்டுக்கு குறைந்தது 6000 ரூபாய் பங்களிக்க
வேண்டும். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்ய அனைத்து இந்திய
குடிமக்களும், இந்திய குடியுரிமை இல்லாதவர்களும் பதிவு செய்யலாம். தேசிய
ஓய்வூதிய திட்டத்தில், கணக்கு வைத்திருப்போரின் வசதிக்கேற்ப, சேர்த்து
வைத்த பணத்தை நிறுவன கடனாக, சமபங்காக, அரச பத்திரங்களாக மாற்றிக்கொள்ளலாம்.
ஓய்வூதிய திட்டத்தில் பணம் முதலீடு செய்வதற்கு வருமான வரிச் சட்டம் 80
சியின் படி ஆண்டிற்கு 1.5 லட்சம் வரை உள்ள முதலீட்டிற்கு வரி விலக்கு பெற
முடியும்.
மியூட்சுவல் பண்ட் ( இஎல்எஸ்எஸ்)
மியூட்சுவல் பண்ட் எனப்படும் இதிலும் ஒன்றரை
லட்சம் வரை சேமிக்க முடியும். 3 வருட காலம் முதலீட்டை திரும்ப எடுக்க
முடியாது லாக் இன் காலமாகும். இது பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு
உட்பட்டது. குறைந்தது 500 ரூபாய் முதலீடு செய்யலாம். ஒரு வேளை 3
வருடத்திற்கு பிறகு, நாம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போக கூட
வாய்ப்பு இருக்கிறது. மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட்
திட்டத்தில் கட்டாயம் தொடர வேண்டிய முதலீட்டு காலம் குறைவு
தேசிய சேமிப்பு பத்திரம் ( என்எஸ்சி)
தேசிய சேமிப்பு பத்திரம் எனப்படும் இதில்
முதலீடு செய்தால் ஐந்து வருடம் கழித்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.
இதில் கிடைக்கும் வட்டி 8.5%. குறைந்தது 100 ரூபாய் முதல், ஒன்றரை லட்சம்
வரை சேமிக்க முடியும். இதை தபால் நிலையத்தில் வாங்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி ( பிபிஎஃப்)
பொது வருங்கால வைப்பு நிதியில் யார்
வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதில் குறைந்தது 500 ரூபாய் முதல்
அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய் வரை சேமிக்கமுடியும். ஒவ்வொரு வருடமும்
வட்டியை புதிதாக நிர்ணயம் செய்வார்கள். இதில் 3 வருடத்துக்கு பிறகு, 5
வருடத்திற்குள் கடன் வாங்க முடியும். அதே மாதிரி 6 வருடத்திற்கு பிறகு
சிறிது பணம் எடுத்துக்கொள்ளலாம், நிபந்தனைக்குட்பட்டது.
சுகன்யா சம்ரிதி யோஜனா ( எஸ்எஸ்ஒய்)
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் இது.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் தபால் நிலையங்களில் தொடங்கலாம். 250 ரூபாய்
முதல் 1000 ரூபாய் வரை மாதம் சேமிக்கலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 21
வயதுவரை சேமிக்க வேண்டும். ஒன்றரை லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். பணம்
முதிர்வடைந்த பின்னர் வட்டிக்கு வரி கிடையாது.
வங்கி, போஸ்ட் ஆபிஸ் வைப்பு நிதி
பணத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்பவர்கள்
வங்கிகளில் ஐந்து வருடம் முதலீடு செய்யலாம், இதற்கு வருமான வரி விலக்கு
ஒன்றரை லட்சம் வரை உண்டு. இதில் குறைந்தது ஐந்து வருடம் இணைந்திருக்க
வேண்டும். இதுவும் அஞ்சலக டெர்ம் டிபாசிட்டும் ஒரே மாதிரியானவை.
யூலிப் (யுனிட் லிங்க் இன்சூரன்ஸ் திட்டம்)
ஆயுள்
காப்பீடு திட்டங்களில் ஒன்றரை லட்சம் வரை சேமிக்க முடியும். இதில்
எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் யூலிப் திட்டங்கள் பிரசித்தி பெற்றவை. முறையே
6% முதல் 10% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. 5ஆண்டு காலம் லாக் இன்
செய்ய வேண்டும். நடுவில் பாலிசியை சரண்டர் செய்யும்போது பெரிய அளவு இழப்பு
நேரிடும். நாம் கட்டிய தொகையைவிட குறைவாக கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...