Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எந்த வெங்காயம் நல்லது? சின்ன வெங்காயமா, பெரிய வெங்காயமா?




வெங்காயம் எப்போதும் உங்களை கட்டாயம் அழ செய்யக் கூடிய ஒன்று தான். ஆனால் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வெங்காயம் இந்திய உணவுகளில் முக்கிய இடத்தை பெற்றிருக்க கூடிய ஒரு பொருள். ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின்-சி, ஃபிளவனாய்டுகள் மற்றும் பைட்டோனுயூட்ரின்கள் இருப்பதால் மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருளாகிறது.
வெங்காயத்தில் இருக்கும் ஃப்ளாவனாய்டுகள் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன், பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் போன்ற சில நோய்களின் அபாயத்தை குறைக்கும் தன்மையை பெற்றிருக்கின்றன. இதை தவிர வெங்காயத்தில் நார்சத்து, ஃபோலிக் அமிலம், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருக்கின்றன.மற்ற அல்லியம் வகையை சார்ந்த காய்கறிகளை விட வெங்காயம் ஆரோக்கியமான ஒன்று.
வெள்ளை வெங்காயத்தை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெங்காயத்தை பயிர் வழக்கம் கி.மு ஐந்தாயிரத்தில் இருந்து மக்களிடையே காணப்படுகிறது. மேலும், 16-ம் நூற்றாண்டில் பெண்களின் கருவுறாமை பிரச்சனை போன்ற பல நோய்களுக்கு வெங்காயம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இங்கு வெங்காயத்தின் பயன்களை பார்க்கலாம்.
ஆரோக்கியமான இதயத்திற்கு
இதய நோய் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக திகழ்வது வெள்ளை வெங்காயத்தில் ஆரோக்கியமான நன்மைகளில் ஒன்றாகும். இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்து கொண்டால் இரத்த உறைதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது
வெங்காயம் மற்றும் மஞ்சள் ஒன்றோடு ஒன்று கலப்பதால் கிடைக்கும் இரசாயனம் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. இது குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் இயற்கையாகவே வெங்காயத்தில் இருக்கும் க்யூயர்சிடின் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது. மேலும், இது எல்லா வகையான புற்றுநோய் ஆபத்தையும் தடுக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
தூக்கம் மற்றும் மனநிலை
வெங்காயம் ஒரு இயற்கை தூக்கமருந்து ஆகும். மேலும் இதில் உள்ள வேதிப்பொருட்கள் உங்களின் மனநிலையை மகிழ்ச்சியானதாக மாற்றக்கூடும். எனவே உங்கள் உணவில் தினமும் வெள்ளை வெங்காயத்தை சேர்த்துக்கொள்வது உங்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும்.
எதிர்ப்பு அழற்சி
வெள்ளை வெங்காயத்தில் உள்ள அதிகளவு சல்பர் மிகச்சிறந்த எதிர்ப்பு அழற்சி பொருளாகும். இது உங்கள் இரத்தத்தில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தும் உதவும். மேலும் இதனை ஆஸ்துமாவிற்கு மருந்தாக கூட பயன்படுத்தலாம்.
நோயெதிர்ப்பு மண்டலம்
வெள்ளை வெங்காயத்தின் மிகச்சிறந்த பயன்களில் ஒன்று இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவது. சளி, இருமல் போன்ற நோய்கள் அடிக்கடி ஏற்பட காரணம் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்தான். எனவே இதனை உங்கள் உணவில் அடிக்கடி சாப்பிடும்போது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். மேலும் இதனை சாப்பிடுவது அலர்ஜிகள் ஏற்படுவதை தடுக்கிறது.
செரிமான மண்டலம்
வெங்காயத்தை விட வெள்ளை வெங்காயத்தில் செரிமானத்தை அதிகரிக்க கூடிய வேதிப்பொருள் அதிகம் உள்ளது. வெள்ளை வெங்காயம் உங்கள் செரிமான மண்டலத்தை சீராக்க கூடும். உணவில் வெள்ளை வெங்காயம் சேர்க்கப்படும்போது அது உங்கள் உணவை எளிதில் செரிமானம் அடைய வைக்கும். மேலும் இது அல்சர், வாயுக்கோளாறு போன்ற பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.
சர்க்கரை நோய்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதில் வெள்ளை வெங்காயம் முக்கியபங்கு வகிக்கிறது. வெள்ளை வெங்காயத்தில் உள்ள குரோமியம் மற்றும் சல்பர் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குவதோடு அதிகமுள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்கிறது.
மலட்டுத்தன்மையை குறைக்கிறது
வெங்காயத்தை கருவுறுதலுக்கும், ஆண்மையை அதிகரிப்பதற்கும் பழங்காலம் முதலே நம் உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுதும் வெள்ளை வெங்காயம் மலட்டுத்தன்மையை குணப்படுத்துவதற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் உள்ள போலிக் அமிலங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறப்பு குறைபாடுகளை சரிசெய்ய உதவுகிறது. அதுமட்டுமின்றி இதில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது.
எலும்புகளின் ஆரோக்கியம்
வெள்ளை வெங்காயத்தின் மிக முக்கிய பயன்களில் ஒன்று எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது. குறிப்பாக வயதான பெண்களுக்கு எலும்புகளை வலுப்படுத்த வெள்ளை வெங்காயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் தொடர்ந்து வெள்ளை வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் அது பெண்களின் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்





1 Comments:

  1. சின்னதா பெரிசானு தெரியல.. பயனுள்ள தலைப்பை தேர்ந்து எடுக்கவும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive