1903
ஆண்டுவாக்கில் பாரீஸில் ஒரு புது வித மோகம் பரவியது அது என்னவென்றால்
குதிரையை விட வேகமாக வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதுதான் இதனால் தொடர்
விபத்துகள் அதிகமாயின விபத்துகளின் போது கண்ணாடிகள் உடைந்து ஓட்டுநர்களின்
உயிர்களை கொல்லும் செய்திகள் நாளிதழ்களில் வழக்கமான செய்திகளாயின இதை
தவிர்க்க பல விஞ்ஞானிகள் மூளையை கசக்கி ஆராய்ந்து கொண்டு இருந்தனர் ஆனால்
இவ்வித ஆராய்ச்சிகளில் ஈடுபடாத வேதிபொருள்களின் தன்மைகளை ஆராயும் எடொர்டு
பெனிடிக்டஸ் என்ற பிரெஞ்சு வேதியியல் விஞ்ஞானி தன்னுடைய வழக்கமான
சோதனைக்கு தேவைப்படும் ஒரு வேதிப்பொருள் உயரத்தில் ஒரு கண்ணாடி குடுவையில்
இருந்தது .
உதவிளார் இல்லாததால் தானே ஏணி மூலம் ஏறி அதை எடுத்தார் எடுக்கும் போது
அருகில் இருந்த ஒரு காலியான கண்ணாடிகுடுவை கை தவறி கீழே விழுந்தது உடைந்த
கண்ணாடிகுடுவையை பார்த்த எடொர்டு பெனிடிக்டஸ்க்கு தன் கண்களை தானே நம்ப
முடியவில்லை ஏன் எனில் உடைந்த கண்ணாடி குடுவை கூர்மையாக உடையவில்லை சிதறலாக
உடைந்து இருந்தது மேலும் குடுவையின் உருவம் கூட மாறவில்லை . இந்த அதிசயம்
எப்படி என்று யோசித்த எடொர்டு பெனிடிக்டஸ்க்கு ஒன்று நினைவில் வந்தது பல
மாதங்களுக்கு முன்பு அந்த குடுவையில் “ செல்லுலோஸ் நைட்ரேட்(Cellulose
nitrate) “ என்ற பொருளை வைத்து இருந்ததும் அதை சரியாக மூடிவைக்காததும்
நினைவுக்கு வந்தது “ செல்லுலோஸ் நைட்ரேட் “ முழுதும் ஆவியாகி இருக்கிறது
ஆனால் கண்ணாடி குடுவையில் “ செல்லுலோஸ் நைட்ரேட் “(Cellulose nitrate)
ஆனது ஒரு மெல்லிய படலத்தை உருவாக்கி இருந்து இருக்கிறது அதனால்தான்
கண்ணாடி குடுவை கீழே உடைந்தும் கூர்மையக உடையாமல் சிதறலாக உடைந்து
இருக்கிறது என்று எடொர்டு பெனிடிக்டஸ் அறிந்து கொண்டார் .
எதிர்பாராதவிதமாக தற்செயலாக நிகழ்ந்த இந்நிகழ்ச்சியின் மூலம்
விபத்துகளின் போது பாதிப்பினை ஏற்ப்படுத்தாத கண்ணாடியினை கண்டுபிடித்து
புகழின் உச்சிக்கு போனார்.
தற்பொழுது பேருந்துகளின் கண்ணாடிகள்
உட்புறகண்ணாடி அடுக்கு மற்றும் வெளிப்புற கண்ணாடி அடுக்கிற்கு நடுவில்
செல்லுலோஸ் என்ற பிளாஸ்டிக் அடுக்கு என மூன்று அடுக்குகளால்
தயாரிக்கப்படுகிறது இதனால்தான் விபத்துகளின் போது கண்ணாடி கூர்மையாக
உடையாமல் சிதறலாக உடைந்து பல லட்சம் உயிர்களை காத்து வருகிறது மேலும்
அழகு மிளிரும் கட்டிடங்கள் கட்டும் துறையிலும் , பாதுகாப்பு துறையிலும்
தவிர்க்கமுடியாத பொருளாக உள்ளது உடையாத கண்ணாடிகள
கண்ணாடியின் வகைகள்
கி.மு. 15ஆம் நூற்றாண்டில் வெனிசுலா
நாட்டு தொழில் நுட்பவியலாளர்கள் தெளிவான படிகக் கண்ணாடிகளைக் (Clear
crystal Glass) கண்டுபிடித்தார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ்
ராவென்ஸ்கராப் தெளிவான படிகக் கண்ணாடிகளின் தொழிநுட்பத்தைச்
செறிவாக்கினார். கண்ணாடி தயாரிப்பிற்கு முதன்முதலாகக் காப்புரிமை பெற்றது
இந்த முறைக்குத்தான். பொட்டாசியத்துக்குப் பதிலாகக் காரீய ஆக்ஸைடுகள்
கலந்ததால் கண்ணாடி கடினமானது. அதனால் அதை எளிதாக வெட்டவும் செறிவாக்கவும்
முடிந்தது. இதனால இவ்வகை படிகக் கண்ணாடிகள் விஞ்ஞானத்தில் மிகப்பெரிய
மாற்றத்தை ஏற்படுத்த உதவின.
இத்தாலியில் கி.பி. 1284ஆம் ஆண்டு
சால்வினோ டி அமர்தே (Salvino D'Armate) மூக்கு கண்ணாடியைக்
கண்டுபிடித்தார். 1608இல் ஹாலந்தைச் சேர்ந்த மூக்கு கண்ணாடி செய்யும்
தந்தையும் மகனுமான ஹன்ஸ் என்ஸனும் (Hans Jansen) சக்கரியாஸ் என்ஸனும்
(Zacharias Jansen) முதல் தொலைநோக்கியைக் (Telescope)
கண்டுபிடிக்கிறார்கள்.மூக்கு கண்ணாடி கண்டுபிடித்ததன்
உந்துதலாகக் கொண்டுதான் ஹாலந்தைச் சேர்ந்து ஆண்ட்டன் வான் லியுவென்ஹொக்
1632ஆம் ஆண்டு நுண்ணோக்கிய (Microscope) கண்டுபிடித்தார். அந்த நுண்ணோக்கி
மூலமாக அவர் முதன்முதலாகப் பாக்டீரியாவைப் பார்த்தார். அது அறிவியல்
துறையின் புரட்சிக்கு வித்திட்டது.
16ஆம் நூற்றாண்டில் முகம் பார்க்கும்
கண்ணடித் தயாரிப்பு பிரபலமடைந்தது. கண்ணாடிச் சட்டகத்தின் மேற்பரப்பு
இயந்திரங்களின் உதவியால் பளபளப்பாக்கப்பட்டு, கண்ணாடியின் ஒரு பகுதி ரசம்
பூசி மறைக்கப்பட்டது. ஆனால் இத்தாலியில் ஒரு அகழ்வாராய்ச்சியில்
கண்டெடுத்த முகம் பார்க்கும் கண்ணாடி கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
அதன் மறுபுறம் பிம்பம் தெரிவதற்காக சிவப்பு அரக்கால் பூசப்பட்டிருந்தது.
1903ஆம் ஆண்டு வருஷத்தில் அமெரிக்காவில்
மைக்கெல் ஜோசப் ஓவன் என்பவர் கண்ணாடி பாட்டில் தயாரிக்கும் இயந்திரத்தைக்
கண்டுபிடித்தார். அது மிக விரைவாக நிமிடத்திற்கு 240 பாட்டில்களைத்
தயாரித்தது. இது கண்ணாடி பாட்டிகள் பயன்பாட்டை அதிகமாக்கியது. அதே ஆண்டு
பிரான்ஸைச் சேர்ந்த எடாவ்ரெட் பெனடிக்ட்டஸ் (Edouard Benedictus)
வாகனங்களின் உபயோகிக்கப்படும் Laminate கண்ணாடிகளைக் கண்டுபிடித்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» அறிவியல்-அறிவோம்: உடையாத கண்ணாடி கண்டுபிடிப்பின் சுவையான வரலாறு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...