'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாணவர்களுக்கு மீண்டும் இலவச
நோட்டு, புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள்
துவங்கியுள்ளன.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில், புயல்கள் உருவாவது வழக்கம்.இந்த
ஆண்டு, பருவமழை தாமதமாக துவங்கினாலும், துவக்கத்திலேயே புயலை
உருவாக்கிஉள்ளது. வங்க கடலில் உருவான, கஜா புயல், தமிழகம் வழியே கரை
கடந்து, அரபிக்கடல் சென்றது.புயல் கரை கடந்ததால், நாகை, திருவாரூர்,
புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களும், காரைக்காலும், கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை இழந்து,
நிர்கதியாகிஉள்ளனர்.பொதுமக்களை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டு வர, அரசு
தரப்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதில், ஒரு
கட்டமாக, பள்ளிக் கல்வித் துறை சார்பில், புயல் மீட்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த, மாணவ -
மாணவியர் பாட புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் பள்ளிக்கு தேவையான
பொருட்களை இழந்திருந்தால், அவர்களுக்கு புதிதாக வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக அரசின் இலவச நல திட்டங்களின் படி, புதிய பாட
புத்தகம், நோட்டு புத்தகம், கிரயான்ஸ், கணித உபகரண பெட்டி உள்ளிட்டவை,
மீண்டும் வழங்கப்பட உள்ளன.இதற்காக, மாவட்ட வாரியாக கணக்கெடுத்து, அறிக்கையை
விரைந்து அளிக்கும்படி, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன்
உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...