கால்நடை உதவி மருத்துவர் பணி தேர்வானோர் விபரம் வெளியீடு

கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம், அரசு இணைய தளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் இயங்கி வரும், பல்வேறு கால்நடை மருத்துவ நிலையங்களில், கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.அவற்றுக்கு, ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, அக்., 8 முதல், 13 வரை நடந்தது.இதில் தேர்ச்சி பெற்ற, 818 பேரின் பதிவு எண் மற்றும் அவர்களுக்கான பணியிட விபரம், www.tn.gov.in இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கான பணி நியமன ஆணை, பதிவு அஞ்சல் வழியே, அனுப்பி வைக்கப்படும்.பணி நியமன ஆணை பெற்றதும், சம்பந்தப்பட்ட மண்டல இணை இயக்குனரை அணுக வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this

0 Comment to "கால்நடை உதவி மருத்துவர் பணி தேர்வானோர் விபரம் வெளியீடு "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...