கஜா புயல் உருவாகி உள்ள நிலையில் வரும் 15ம் தேதி தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்ககடலில் நிலவி வந்த ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கஜா புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் கனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90-110 கீ.மீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசக்கூடும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தல் அதிகளவிலான மழை பெய்வதே ரெட் அலர்ட் எனப்படுகிறது. கடந்த மாதம் 7ம் தேதி இதே போல ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. பின்னர் அதனை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றது.
இந்த ரெட் அலர்ட் எப்ப வாபஸ் வாங்குவாங்க?
ReplyDelete