இயற்கை விவசாயம் என தனி பாடம் வைத்து கற்பிக்கும் பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம்,
ஆவணத்தாங்கோட்டை-மேற்கு நடுநிலைப்பள்ளியில் எதிர்கால சமுதாயமாகிய பள்ளி மாணவர்களுக்கு விவசாயத்தை கற்பிக்கும் பொருட்டு மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் என தனி பாடம் அறிமுக படுத்தப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக களைபறித்தல் நிகழ்வினை மாணவர்களை நேரடியாக வயலுக்கே அழைத்து சென்று விவசாயிகளையும் அழைத்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
Share this