ஹார்வார்ட் பல்கலை-யின் மாணவ அமைப்பு தலைவரானார் இந்திய வம்சாவளிப் பெண்!

புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வார்ட்
பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பு தலைவராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவருபவர் பழனியப்பன். இவர், கடந்த 1992ம் ஆண்டு தன் குடும்பத்துடன் சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்துள்ளார். இவருடைய மகள் ஷ்ருதி பழனியப்பன். 20 வயதே ஆன இவர், புகழ்பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பு தலைவராக இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்படவேண்டும் என்பதை முக்கிய கொள்கையாக கொண்டுள்ள ஷ்ருதி, 41.5% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 'make Harward home' என்ற முழக்கத்தை முக்கியமானதாக வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.


அமெரிக்க ஜனநாயக கட்சியின் மிக இளம்வயது பிரதிநிதியாக ஷ்ருதி பழனியப்பன் இருந்தார். இவர் 2016ம் ஆண்டு அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் முக்கியப்பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this

0 Comment to "ஹார்வார்ட் பல்கலை-யின் மாணவ அமைப்பு தலைவரானார் இந்திய வம்சாவளிப் பெண்!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...