கஜா புயல் பாதிப்பு.. நன்கொடை வழங்க முதல்வர் வேண்டுகோள்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் ஆகியோர், தமிழக அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்கள் தங்களது பங்களிப்புகளை குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக , அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை -600 009 என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECS எனப்படும் electronic clearing system மூலமாக, இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் தலைமைச் செயலக கிளைக்கு, நேரடியாக அனுப்பி வைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ECS மூலம் நிதி அனுப்புவோர் உரிய அலுவலக பற்றுச்சீட்டினைப் பெற ஏதுவாக பெயர், செலுத்தும் தொகை, வங்கி , செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண், முகவரி மற்றும் இ-மெயில் விவரங்களை குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Share this

0 Comment to "கஜா புயல் பாதிப்பு.. நன்கொடை வழங்க முதல்வர் வேண்டுகோள் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...