அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் யோகாசன சாகசநிகழ்ச்சிஅரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி மாணவர்களின் யோகாசன சாகசநிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவ மாணவியர், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி யோகாசன சாகச நிகழ்ச்சியை நடத்தினர்.
இப் பள்ளி மாணவ மாணவியருக்கு தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தனது சொந்த செலவில் யோகா, கராத்தே, சிலம்பம், கணினி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தியும், அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையிலும், மாணவ மாணவியர் உடல் முழுவதும் தீபம் ஏற்றி, பத்மாசனம், ஏகபாத சிரசாசனம், உபவிஷ்ட கோனாசனம், யோகநித்திரை உள்ளிட்ட ஆசனங்களை செய்தனர். மேலும் தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து விளக்கும் வகையில் துண்டு பிரசுரம் கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.Share this

0 Comment to "அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் யோகாசன சாகசநிகழ்ச்சி "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...