கஜா' நிவாரண நிதி வழங்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்


 'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ராமநாதபுரம் பேராவூர் அரசுப்பள்ளி மாணவர்கள் 2,900 ரூபாய் பணம் வழங்கினர். அவர்களை கலெக்டர், விவசாயிகள் கவுரவித்தனர்.
இப்பள்ளி மாணவர்கள் 69 பேர் தங்கள் சிறுசேமிப்பாக வைத்திருந்த தொகை 2,900 ரூபாயை நிவாரண உதவியாக தலைமையாசிரியர் காளீஸ்வரியுடன் வந்து கலெக்டர் வீரராகவ ராவிடம் வழங்கினர்.வந்திருந்த மாணவிகளை கலெக்டர் வீரராகவராவ், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு அழைத்து வந்தார்.
அங்கிருந்த விவசாயிகளிடம், ''உங்களை போன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக பள்ளி மாணவர்கள் நிவாரணத்தொகை வழங்கி உள்ளனர். அவர்கள் வழங்கிய தொகை சிறிது என்றாலும், அவர்களின் பெரிய மனதை வாழ்த்த வேண்டும்,''என்றார். அப்போது விவசாயிகள் கரவொலி எழுப்பி மாணவர்களை பாராட்டினர்

Share this

0 Comment to "கஜா' நிவாரண நிதி வழங்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...