பொதுத்தேர்வுகள் இன்னும் நான்கு
மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், மாநகராட்சி பள்ளிகளில் தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பல நிரப்புவதில், தொடர் இழுபறி நிலவுகிறது.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 83 பள்ளிகள் உள்ளன
இதில், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள், நிரப்புவதற்கான விதிமுறைகளுக்கு எதிராக, வழக்கு நிலுவையில் இருந்தது.இதனால், பொறுப்பு தலைமையாசிரியர்களே, நிர்வாக பணிகளை கவனித்து வந்தனர்
தலைமையாசிரியர் பணியிடம் நிரப்ப, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், தீர்ப்பு வெளியானது
மாநகராட்சி பள்ளிகளில், தீர்ப்பு வெளியான பிறகும், காலியிடங்களை நிரப்பவில்லை. இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது
இதைத்தொடர்ந்து பள்ளி வாரியாக, பதவி உயர்வுக்கு தகுதியுள்ளோர் பட்டியல் பெறப்பட்டது.அடுத்தகட்ட பணிகள் எதுவும் நடக்கவில்லை
பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் வேளையில், மாநகராட்சியின் இந்த மெத்தனப் போக்கால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது
கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சரவணமுத்து கூறுகையில், '' ஐந்து தலைமையாசிரியர் பணியிடங்கள் உட்பட, பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவில்லை
பதவி உயர்வுக்கான பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடவில்லை. விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,'' என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...