கனமழைக்கு மீண்டும் வாய்ப்பு… உள்மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகிறது மழை…


கஜா புயல் புரட்டி எடுத்த, நிவாரணம் கூட இன்னும் முடிவடையாத நிலையில், தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 19 தேதி, கடலோர மாவட்டங்களில் நிச்சயம் மழை பெய்யும். அன்றே வட கடலோர உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 
நாளை முதல் வடகடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 18-ம் தேதி வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும் 20-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்

Share this