தேவையான பொருட்கள்:


பச்சரிசி - 2 கப்
வெல்லம் - 2 கப் 
பொடித்த ஏலக்காயம் - கால் டீஸ்பூன் 
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் 
எண்ணெய் - பொறிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
அரிசியை எடுத்து ஒரு அரைமணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி (சற்று ஈரப்பதம் இருக்குமாறு) பின்னர் மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பாகு எடுக்கும் முறை:
அடிப்பாகம் கனமான பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கால் டம்ளர் தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள்.  வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடிகட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க  வேண்டும்.
சரியாக வந்திருக்கிறதா? என்பதை எப்படி அறிய, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் விட்டு, அதில் சிறிது பாகு வெல்லத்தை  விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம். சரி, பாகு வந்ததும், இறக்கி  விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும். தேவைப்பட்டால்  சிறிது சுக்குத்தூள் சேர்த்து கொள்ளலாம்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். அவ்வளவுதான் அதிரசம் தயார். சாப்பிட்டுப் பாருங்க, அதிரசம் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments