நள்ளிரவு முதல் திடீரென உயர்ந்த சிலிண்டர் விலை!

மானிய சமையல் எரிவாயு விலை
சிலிண்டருக்கு
2 ரூபாய் 94 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சமையல் எரிவாயு விலை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் மானிய சமையல் எரிவாயு விலை உயர்வால், சென்னையில் ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயு 493 ரூபாய் 87 காசுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இதேபோல் டெல்லியில் 502 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு விலை 505 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 60 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஜுன் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக 6-ஆவது முறையாக விலை உயர்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தொடர்ச்சியாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Share this