21/11/18 அன்று காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரத்தை இரயில் மார்க்கமாக அடைந்தோம்.
முன்பதிவு செய்யப்பட்ட விடுதியில் தயாராகி, ஏற்பாடு செய்யப்பட்ட காரில் விண்வெளி மையத்தை காலை 10 மணியளவில் சென்று அடைந்தோம்.
மூன்று கட்ட பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு வளாகத்தினுள் நுழைந்தோம்.
இஸ்ரோ தும்பா ஆய்வு மையத்தின் தோற்றம், முதலில் செய்யப்பட்ட சோதனைகள்,முதன்
முதலில் சைக்கிள் மூலம் இராக்கெட் பாகங்களை எடுத்துச் சென்ற விதம்
ஆகியவற்றை அலுவலர்கள் கூறிய போது மாணவன் மிகுந்த வியப்பிற்குள்ளானான்
அடுத்ததாக விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் சோதனைக் கூடம் மாணவனை ஆச்சரியப்படுத்தியது.
இராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் உண்மையான பாகங்கள் காட்சிக்கு
வைக்கப்பட்டு இருந்தன.அவை குறித்த தகவல்கள் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன.
கிரையோஜெனிக் என்ஜின்,சந்திரயான் 1, மங்கள்யான் குறித்த அரிய செய்திகள் மாணவனின் சிந்தனையைத் தூண்டுபவையாக இருந்தன.
ஆரியப்பட்டா முதல் GSLV மாக் 29 வரையிலான இராக்கெட்டுகளின் செயல்பாடுகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
விண்வெளிக் குப்பைகளை நீக்கும் முறை குறித்த வினாவிற்கு மாணவர்கள் புதுமையான முறையில் பதில் அளித்தான்
அடுத்து Isro வின் தோற்றம் முதல் இன்று வரையிலான வரலாறு மற்றும் சாதனைகள் ஆவணப் படமாகக் காட்டப்பட்டன.
விக்ரம் சாராபாய் முதல் சிவன் வரை இஸ்ரோவின் இயக்குநர்களின் சாதனைகள்
மற்றும் அவர்களின் குழுக்களின் சாதனைகள் ஆவணப்படத்தில் காட்டப்பட்டன.
ஒளிப்படத்தில் காட்டப்பட்ட,தமிழர்களுக்கு பெருமை சேர்த்த அப்துல் கலாம்
அவர்கள் மற்றும் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் வரலாறு மற்றும் சாதனைகள் எமது
அரசுப் பள்ளி மாணவனுக்கு உத்வேகம் அளித்தன.
மதிய உணவினை முடித்துக் கொண்டு அடுத்ததாக பிளானட்டோரியம் பார்வையிட வாய்ப்பு கிடைத்தது.
பல்வேறு தாவர உயிரிகள் மற்றும் அவற்றின் தனித்தன்மைகள் மற்றும்
சிறப்புகள் குறித்த தகவல்கள் எங்கள் குழுவினருக்கு ஆச்சரியம் அளித்தன.
அடுத்ததாக அறிவியல்பூர்வமான விளக்கங்களுடன்,
அறிவியல்பூர்வமாக அமைக்கப்பட்டு இருந்த விளையாட்டு அரங்கமும், அந்த விளையாட்டுகளுக்கான விளக்கங்களும் அற்புதமாக இருந்தன.
இறுதியாக Hellow earth என்ற அறிவியல் 3D ஆவணப்படம் மிகுந்த பிரமிப்பு
அளிப்பதாய் இருந்தது.மனிதன் தோன்றியது முதல் இன்று வரையிலான மொழியின்
வளர்ச்சி,தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வேகம்,அண்டங்கள் மற்றும் பேரண்ட
ஆச்சரியங்கள், எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் வேற்றுகிரக மனிதனுக்கான தகவலை
மனிதர்களாகிய நாம் அளித்துள்ள முறை குறித்த முப்பரிமாண ஆவணப் படம் மாணவனை
உச்ச பட்ச ஆச்சரியப்படுத்தியது என்றால் அது மிகையில்லை.
மிகக் சிறந்த அனுபவங்களைப் பெற்ற எம் அரசுப் பள்ளி மாணவன் தாமும்
விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தை கைக்கொண்டவனாய்
அறிவுடனும்,மகிழ்வுடனும் ஆய்வு மையத்திலிருந்து திரும்பினான்.
சிறு தீப்பொறி பெரும் நெருப்பிற்கு ஆரம்பம் அன்றோ?
சர்வதேச விண்வெளி வாரம் வருடந்தோறும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல்
.10-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.இந்த வருடம் அரசு, மற்றும் தனியார்
பள்ளிகளிடையே அனைத்து மாணவ்ர்களுக்கு இணையம் வழியே அறிவியல் சார்பு
வினாக்கள். தபரப்ட்டு மதிப்பீடு செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் பல மாணவர்
பங்கேற்ற நிலையில் கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளி, காளப்பநாயக்கன்பாளையம் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் S
மோகன் குமார் . தேர்வாகியுள்ளர். வெற்றி பெற்ற மாணவன் நவம்பர் மாதம் 20-ம்
தேதி திருவனந் தபுரத்திலுள்ள( IS RO) தும்பா. விண்வெளி . மையத்திற்கு
அழைத்து செல்லப்பட்டுள்ளார்.. ்.. அங்கு .விஞ்ஞானிகளிடம் கலந்துரையாடல் ,
ராக்கெட் தத்துவம், மற்றும் அதன் செயல்பாடுகளை .அறிந்து வந்துள்ளான்.. open
Space foundation என்ற விண்வெளி அறிவியல் சார்பாக செயல்பாடுகளில்
ஈடுபட்டு வரும் நிறுவனம் பயணம், தங்கும் இடம் மற்றும் உணவு உட்பட அனைத்து
வசதிகளையும் வழங்கியுள்ளது. பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளை வழிகாட்டி
மற்றும் பள்ளி அறிவியல் ஆசிரியர் திரு .ஆனந்த குமார் அவர்கள்
செய்துள்ளார்.. இவர் அன்மையில் இந்த ஆண்டிற்கான .சர்வதேச நல்லாசிரியர்
விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவனை
பெரியநாயக்கன் பாளையம் வட்டார கல்வி அலுவலர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி,
திருமதி சுதா , ப பள்ளி தலைமை யாசிரியர் வனஜா குமாரி,மற்றும் பெற்றோர்
சங்கத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
congrats
ReplyDelete