கணினி தமிழ் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு


முதல்வர் கணினி தமிழ் விருதுக்கான
விண்ணப்பங்கள், டிச., 31க்குள் வந்தடைய வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ் வளர்ச்சி கருதி, தமிழ் மொழியை கம்ப்யூட்டரில், அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோருக்கு, 2013 முதல், 'முதல்வர் கணினி தமிழ் விருது' வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப்பதக்கம் மற் றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து, தமிழ் மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2015, 2016, 2017ல் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விருதுக்கான விண்ணப்பம், தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு, டிச., 31க்குள் வந்தடைய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Share this