அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து, அரசுக்கு நெருக்கடி?

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்டக்குழு இன்று கூடி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ரத்து செய்வது குறித்து, முடிவெடுக்க உள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இருப்பினும், கோரிக்கைகளை அரசு ஏற்காததால், 27ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது.
 
 இதற்கான, ஆயத்த பணிகளும் நடந்தன.இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சங்கங்கள் இடையே, வேலைநிறுத்தம் குறித்து, முரண்பாடான கருத்துகள் உருவாகின. கூட்டமைப்பில் இல்லாத, அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து, அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் போராட்டம் நடத்த, சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, கூட்டமைப்பின் உயர்மட்ட குழு, சென்னையில் இன்று கூடி ஆலோசனை நடத்தி, உறுதியான முடிவெடுக்க உள்ளது.

Share this