பட்டாசு வெடிக்காமல் செடிகள் நட்ட சிறுவன்


பட்டாசு வெடிக்காமல் செடிகள் நட்ட சிறுவன்

வெடிக்கு பதில் செடியை நட்ட சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
வேலுார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த குட்ட கிந்துாரை சேர்ந்தவர் லீலா வினோதன். லெதர் டெக்னாலஜி படித்த இவர், தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் விகான் கிருஷ்ணா, 4, அங்குள்ள விவேகானந்தா பள்ளியில், யூ.கே.ஜி., படித்து வருகிறான். 


வழக்கமாக தீபாவளியையொட்டி, பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். நேற்று, பட்டாசு வெடிப்பதை தவிர்த்த சிறுவன், மாதுளை, எலுமிச்சை உள்பட ஐந்து செடிகளை, தன் நிலத்தில் நட்டு வைத்தான்.

சிறுவனின் பெற்றோர் கூறியதாவது: தற்போதுள்ள சூழலில் மரங்கள் அழிவதால், சுற்றுச்சூழல் பாதிக்கிறது. எனவே, பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், எங்கள் மகனுக்கு மரங்களை வளர்க்க அறிவுரை வழங்கினோம். இனி வரும் காலங்களில், தீபாவளி, பொங்கல் விழாவன்று, மரங்களை நட அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share this

2 Responses to "பட்டாசு வெடிக்காமல் செடிகள் நட்ட சிறுவன் "

Dear Reader,

Enter Your Comments Here...