மாணவியர் 'ஸ்காலர்ஷிப்' விண்ணப்ப காலம் நீட்டிப்பு

'மாணவியருக்கான கல்வி உதவி தொகை பெற, வரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பல்வேறு கல்வி உதவி தொகை திட்டங்கள் அமலில் உள்ளன. வீட்டில் ஒரே பெண் குழந்தையாக இருந்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ், 2 படிக்கும் மாணவிக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டில், இந்த உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை புதுப்பிக்க, வரும், 15ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Share this