Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆங்கில இணைப்புச்சொற்கள் (Conjunctions)

ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன?

ஆங்கில
இணைப்புச் சொற்கள் என்றால், ஆங்கில பேச்சின்கூறுகளில் உள்ளடங்கும் எட்டுக் கூறுகளில் ஒன்றாகும். இவை சொற்கள் (words), சொற்றொடர்கள் (Phrases),  மற்றும் வாக்கியக் கூறுகள் (clauses) போன்றவற்றை இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் ஆகும். வாக்கியக் கூறுகளை இணைத்து நீண்ட ஒரு வாக்கியமாக அல்லது வாக்கியத் தொடராக பொருளை உணர்த்த இந்த இணைப்புச்சொற்கள் ஆங்கில இலக்கணப் பயன்பாட்டில் மிக முக்கியமானவைகளாகும்.

இணைப்புச்சொற்கள் பயன்படு முறைகள்
இணைப்புச்சொற்கள் எவ்வாறு எத்தனை முறைகளில் பயன்படுகின்றன?
இவை இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கியக் கூறுகளை இணைக்க தனித்த ஒற்றை சொல், கூட்டுச்சொற்கள், இடமாறி பயன்படும் சொற்கள் என மூன்று முறைகளில் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:

தனித்த ஒற்றைச்சொல்:
and
for
because
கூட்டுச்சொற்கள்
as long as
in order that
provided that
இடம் மாறி பயன்படும் சொற்கள்
so ... that
either ... or
not only ... but also
இணைப்புச்சொற்களின் வகைகள்
ஆங்கிலத்தில் எத்தனை வகையான இணைப்புச்சொற்கள் உள்ளன?

ஆங்கிலத்தில் நான்கு வகையான இணைப்புச்சொற்கள் உள்ளன. அவைகளாவன:

Coordinating Conjunctions
Subordinating Conjunctions
Correlative Conjunctions
Conjunctive Adverbs

குறிப்பு:
ஆங்கில இணைப்புச்சொற்களின் வகைகளை மூன்றாக மட்டுமே  வகைப்படுத்துவோரும் உளர். இருப்பினும் "Conjunctive Adverbs" களும் வாக்கியக் கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் அவற்றையும் இணைப்புச் சொற்களாகவே  பல ஆங்கில இலக்கணவாதிகள் வகைப்படுத்துகின்றனர். எனவே நாமும் இங்கே நான்காகவே வகைப்படுத்தியுள்ளோம் என்பதை கருத்தில் கொள்க.

இனி இவ்விணைப்புச்சொற்களின் பயன்பாட்டை ஒவ்வொன்றாக கீழே பார்ப்போம்.

Coordinating Conjunctions (ஒருங்கிணைப்பு இணைப்புச்சொற்கள்)
ஒருங்கிணைப்பு இணைப்புச்சொற்கள், வாக்கியங்களில் ஒரே சமனிடையான "சொற்கள்”, "சொற்றொடர்கள்”, "வாக்கியக்கூறுகள் " போன்றவற்றை ஒருங்கே இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் ஆகும். இதனை "ஒருங்கிணைப்புச் சொற்கள்" என சுருக்கமாகவும் கூறலாம்.

அவைகளாவன:
F = For
A = And
N = Nor
B = But
O = Or
Y = Yet
S = So
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

I like bread and butter.
நான் உரொட்டியும் வெண்ணையும் விரும்புகிறேன்.

I like tea, but I don't like coffee.
நான் தேனீர் விரும்புகிறேன், ஆனால் நான் காப்பி(க்கு) விருப்பமில்லை.

How to speak English and how to write in English are two different things.
எப்படி ஆங்கிலம் பேசுவது (என்பதும்) எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது (என்பதும்) இரண்டு வெவ்வேறு விடயங்கள்.

குறிப்பு: ஆங்கிலத்தில் ஒருங்கிணைப்புச் சொற்கள் 7 மட்டுமே உள்ளன. இவற்றை எளிதாக மனதில் இருத்திக்கொள்வதற்கு இச்சொற்களின் முதலெழுத்துக்களை இணைத்து FANBOYS என ஒரு சுருக்கப்பெயராக (Acronyms) அழைப்பர். நீங்களும் இச்சுருக்கப்பெயரை மனதில் இருத்திக்கொள்ளலாம்.

மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.

Subordinating Conjunctions (சார்ந்த இணைப்புச்சொற்கள்)
"சார்ந்த இணைப்புச்சொற்கள்" எப்போதும் பிரதான வாக்கியக் கூற்றையும் (Independent Clause) சார்ந்த வாக்கியக் கூற்றையும் (Dependent Clause) தொடர்புபடுத்தும் வகையில் பயன்படுபவைகள் ஆகும். இவை ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கானவைகள் உள்ளன.
after
although
as long as
as soon as
even though
before
if
how
since
than
that
when
where
whether
while
whenever
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

If I do a job, I will get experience.
நான் ஒரு வேலை செய்தால் எனக்கு கிடைக்கும் அனுபவம்.

I will get experience if I do a job.
எனக்கு கிடைக்கும் அனுபவம் நான் செய்தால் ஒரு வேலை.

Although he is small, he is very strong.
அவன் சிறியவனாக இருந்தப்போதிலும், அவன் மிகவும் வலுவானவன்.

I will be able to buy a car when I get older.
எனக்கு வாங்க முடியுமாக இருக்கும் ஒரு மகிழுந்து நான் வயதானவனாகும் பொழுது.

குறிப்பு: சார்ந்த இணைப்புச்சொற்கள் எப்போதும் சார்ந்த வாக்கிய கூற்றின் (Subordinate Clause) முன்னாலேயே பயன்படும்.

மேலும் விரிவாக இப்பாடத்தை எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.

Correlative Conjunctions (ஒப்புமை இணைப்புச்சொற்கள்)
ஒப்புமை இணைப்புச்சொற்கள் இரண்டு சமனிடையான வாக்கியங்களை ஒப்புமையுடன் இணைக்கும் சொற்களாகும். இவ்விணைப்புச்சொற்கள் சோடிகளாகவே பயன்படும்.
both ... and
so ... as
not ... but
not only ... but also
either ... or
neither ... nor
whether ... or
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

Neither cats nor dogs are my favorite animals.
பூனைகள் நாய்கள் இரண்டு




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive