NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to Rectify Pendrive Errors?

i

இரண்டு விஷயங்களை உறுதியாக சொல்லலாம். ஒன்று நம் அனைவரின் கையிலும் பென்ட்ரைவ்கள் உள்ளன. இரண்டாவது, நாம் அனைவருமே ஒரு முறையேனும் யூஎஸ்பி ட்ரைவை (பென்ட்ரைவ்) கணினியிலிருந்தோ அல்லது லேப்டாப்பில் இருந்தோ அப்படியே பிடிங்கி எடுக்கும் செயலை செய்து இருப்போம்.

நம்மில் எத்தனை பேருக்கு யூஎஸ்பி ட்ரைவை முறையாக இஜெக்ட் செய்த பின்னர் அகற்றும் பழக்கம் இருக்கிறது என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் இந்த கட்டுரையின் முடிவில், நம் அனைவருக்குமே அந்த பழக்கம் ஒட்டிக் கொள்ளும் என்பது மட்டும் உறுதி.

மறுமுறை பயன்படுத்தும் போது?
நீங்கள் கேட்கலாம் - முறையாக இஜெக்ட் செய்யாமல் யூஎஸ்பிக்களை அகற்றி விட்டு, மறுமுறை அதை நான் பயன்படுத்தும் போது எனக்கு எந்த தடங்கலும் வருவது இல்லையே?

பிறகு ஏன் நான் யூஎஸ்பி ட்ரைவை பாதுகாப்பாக அல்லது முறையாக இஜெக்ட் செய்ய வேண்டும்?

சற்றும் யோசிக்காமல் நாம் செய்யும் தவறு!

மணிக்கணக்கில் நிதானமாக காத்துக்கிடக்கும் நாம், ஃபைல் டிரான்ஸ்பர் நிகழ்ந்து முடிந்த வேகத்தில், சற்றும் யோசிக்காமல் யூஎஸ்பிக்களை ரிமூவ் செய்வதால் எந்த சிக்கலும் ஏற்படாது. அதனால் குறிப்பிட்ட கோப்புகளுக்கோ (ஃபைல்ஸ்) அல்லது சாதனங்களுக்கோ (கம்ப்யூட்டர்/ லேப்டாப்) அல்லது யூஎஸ்பிக்கோ கூட எந்த இடையூறும் இருக்காது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது முற்றிலும் தவறு.


 அப்படி என்னதான் பாதிப்புகள் ஏற்படும்?
பல வகையான தொழில்நுட்ப கேள்விகளை சந்தித்த எங்களுக்கு, "யூஎஸ்பியை பாதுகாப்பாக இஜெக்ட் செய்வது எப்படி?", "யூஎஸ்பியை இஜெக்ட் செய்யமால் அகற்றலாமா? அகற்ற கூடாதா?" போன்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட, ஒரு சிறிய ஆய்வை மேற்கொண்டோம். அதனை விளைவாக அறிந்த சமாச்சாரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கூடுதலாக 30 விநாடிகள் செலவழித்து, முறையாக மற்றும் பாதுகாப்பாக யூஎஸ்பியை இஜெக்ட் (வெளியேற்றினால்) செய்வதனால், உங்களின் தரவு (டேட்டா) மற்றும் மென்பொருள் (சாஃப்ட்வேர்) சரியாக சேமிக்கப்படும் (சேவ் ஆகும்) என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரதான ஆபத்து ஒன்றும் உள்ளது!

ஆனால் உண்மையான ஆபத்து டேட்டாவிலோ அல்லது சாஃப்ட்வேரிலோ அல்ல. அது உங்களின் இயக்க முறைமையை, அதாவது ஆப்பிரேட்டிங் சிஸ்டம் எனப்படும் ஓ எஸை சார்ந்துள்ளது. குறிப்பாக நீங்கள் யூஎஸ்பி டிரைவ் மூலம் என்ன செய்கிறீர்கள் என்பதை சார்ந்துள்ளது.


 இன்டர்னெலும் எக்ஸ்டெர்னலும் ஒன்றுதான்!
கேள்வி பதில் தளமான க்கோராவில், சுமார் 92.000 க்கும் அதிகமான ஒப்புதல்களை பெற்றுள்ள பிலிப் ரேமெக்கர் என்பவரின் பதிலானது, "நமது இயக்க முறைமைகள் (ஓஎஸ்) ஆனது எக்ஸ்டெர்னல் டிரைவ்களை (யூஎஸ்பி ட்ரைவ் போன்ற) எப்பொழுதும் இருக்கும் ட்ரைவ்களை போலவே ஏற்றுக்கொள்ளும்படி ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவாக அது கோப்புகளில் காலவரையில்லாத அணுகுதலை எதிர்பார்க்கிறது."

குழம்பிப்போகும் கோப்புகள்!

"இம்மாதிரியான நிலைப்பாட்டில் உங்கள் கணினியில் உள்ள ஒரு ப்ரோகிராம் ஆனது குறிப்பிட்ட ஃபைலை ரீட் செய்து கொண்டிருக்கும் போது, அதாவது எந்தத் தகவலையும் சேமிக்காமல் ரீட் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று நீங்கள் யூஎஸ்பி இணைப்பை துண்டித்தால், அது உங்கள் யூஎஸ்பி ஸ்டோரில் உள்ள கோப்புகளுக்கு மிக அதிகமாக குழப்பத்தை ஏற்படுத்தும்."


 என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும்?
"ஆனால் உங்கள் கணினியோ அல்லது லேப்டாப்போ குழம்பும் பட்சத்தில் தான் ஆபத்து அதிகம். அதாவது டேட்டா காணாமல் போவது, ஃபைல்கள் சிதைந்து போவது, ப்ரோகிராம் செயலிழப்பு அல்லது ரீபூட் செய்வதற்கான அவசியம் ஆகியவைகளை சந்திக்க நேரிடும்" என்கிறார் பிலிப் ரீமேக்கர்.

பாரபட்சம் இன்றி அழிந்து போகும்!

சுருக்கமாக கூறினால், எந்த விதமான எச்சரிக்கையும் இல்லாமல் உங்களின் எக்ஸ்டர்னல் ட்ரைவை வெளியே இழுக்கப்படும் பட்சத்தில், அதில் நீங்கள் சேமித்து வைத்திருந்த கோப்புகள் நிரந்தரமாக அழிந்து போகும் வாய்ப்புகள் உள்ளது. அப்படியாக அழிந்து போகும் கோப்புகள் ஆனது, சமீபத்தில் சேமிக்கப்பட்டது அல்லது சில மணிநேரங்களுக்கு முன்னர் சேமிக்கப்பட்டது என்கிற பாரபட்சம் இன்றி அழிந்து போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதற்கு சரியான தீர்வு தான் என்ன?
சரி, இஜெக்ட் செய்யும் சரியான வழிமுறையாக கூறப்படும் "சேஃப்லி ரிமூவ் ஹார்டுவேர்" கட்டளையானது எவ்வாறு மேற்குறிப்பிட்ட சிக்கலை சரிசெய்கிறது? அதையும் பிலிப் ரீமேக்கரே விளக்குகிறார். சேஃப்லி ரிமூவ் ஹார்டுவேர் கட்டளையானது பின்வரும் விஷயங்களை செய்த பின்னரே யூஎஸ்பி டிரைவ்வை அகற்றுகிறது.

அவைகள் என்னென்ன?

- இது டிஸ்கில் செயலில் உள்ள அனைத்து ரைட்களையும் சுத்தம் செய்யும்.

- மேலும் இது அனைத்து ப்ரோகிராம்களையும் (அலெர்ட் செய்வது எப்படி என்பதை அறிந்து வைத்துள்ளது. அதனால் ட்ரைவ் நீக்கப்படும் போது அதற்கேற்ப சரியான நடவடிக்கையை எடுக்கும்.

- ஒருவேளை நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டால், இது பயனரை எச்சரிக்கிறது, மேலும் திறந்து இருக்கும் கோப்புகளை பற்றிய விவரத்தையும் வழங்கும்.


 இது சார்ந்த சிறப்பு அம்சம் ஏதேனும் உள்ளதா?
நவீன கால இயக்க முறைமைகள் (ஓஎஸ்) சிறப்பாகவும், முடிந்தவரை விரைவாக கோப்புகளை ரைட் செய்யவும், ரீட் செய்யவும் முயலுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக விண்டோஸ், "ஆப்டிமைஸ் ஃபார் க்விக் ரிமூவல்" என்கிற ஒரு அம்சத்தையே அறிமுகப்படுத்தியுள்ளது.

அடுத்த முறை?

"இருந்தாலும் கூட உங்கள் கணினி அல்லது லேப்டாப் உங்கள் வெளிப்புற யூஎஸ்பி டிரைவ் உடனான பரிமாற்ற பணியை முடித்து விட்டதா என்பதை ஒருபோதும் உறுதியாக கூற முடியாது. அது ஒரு பெரிய சூதாட்டத்தை இழுத்து விட்டுவிடும். ஆக யூஎஸ்பியை அகற்றும் முன் முறையாக இஜெக்ட் மறக்க வேண்டாம்" என்கிறார் பிலிப் ரீமேக்கர்.

இதற்காக நீங்கள் செலவழிக்கப்போகும் 30 வினாடிகளில் உங்கள் வாழ்வின் மிக முக்கியமான கோப்புகளோ அல்லது புகைப்படங்களோ பாதுகாக்கப்படலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive