கஜா புயல் பாதிப்பு காரணமாக வரும் 24 ஆம் தேதி நடக்க
இருந்த புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு, தேதி குறிப்பிடாமல்
ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயல் பாதிப்பு காரணமாக வரும் 24 ஆம் தேதி நடக்க இருந்த புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 28 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று வரும் நவம்பர் 25 முதல் 30 வரை நடக்கவிருந்த வனவர், வனக்காவலர், ஓட்டுநர் உரிம வனக்காவலர் பணியிடங்களுக்கான தேர்வு, கஜா புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், கஜா புயல் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட ஆன்லைன் தேர்வுகளுக்கான புதிய தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...