NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ்-2 தேர்வில் சாதிக்க வேண்டுமா? 9ம் தேதி வெற்றி நமதே நிகழ்ச்சிக்கு வாருங்கள், வெற்றியோடு திரும்புங்கள்: மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு

தினகரன், விஐடி பல்கலைக்கழகம் இணைந்து வரும் 9ம் தேதி நடத்தும் வெற்றி நமதே நிகழ்ச்சியில் பிளஸ் 2 மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் கலந்து கொள்ள வசதியாக இலவச பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வாழ்க்கை எனும் பயணத்தில் அடுத்த அடியை எடுத்து வைக்க பிளஸ்2 பொதுத்தேர்வு என்ற முக்கிய சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பை கடந்து பயணம் செய்ய கடின முயற்சி தேவை. அதில் ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கை லட்சியத்தை தீர்மானிப்பது பிளஸ் 2 தேர்வில் பெறும் மதிப்பெண்களே. அதனால்தான் பிளஸ்2 பொதுத்தேர்வில் எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக முழுநேரமும் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனாலும் பிளஸ்2 பொதுத்தேர்வு என்றால் மாணவர்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். இந்த அச்சத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்கவும், தேர்வை தைரியமாக எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண்களை பெறவும், வேலூர் தினகரன் நாளிதழ் மற்றும் விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து 4வது ஆண்டாக வெற்றி நமதே நிகழ்ச்சி வருகிற 9ம் தேதி நடத்துகின்றன.

பிளஸ்2 பயிலும் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் இந்த ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சி வேலூர் விஐடி பல்கலைக்கழகம் அண்ணா ஏசி அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு துவங்கி மதியம் 1.30 மணி வரை நடக்கிறது. இதில் மாணவ, மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும் தலைசிறந்த கல்வியாளர்கள் பதில்களை வழங்குவார்கள். ஆகவே, பாடங்கள் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள், அவற்றுக்கு எவ்வாறு பதில் எழுத வேண்டும் என்று பொதுத்தேர்வு சம்பந்தப்பட்ட எல்லாவிதமான சந்தேகங்களையும் மாணவ, மாணவிகள் கேட்டு தெளிவு பெறுவதுடன் தேர்வு பயத்தில் இருந்தும் விடுபடலாம்.எனவே, மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களது லட்சியத்தை எட்டலாம். வெற்றி நமதே நிகழ்ச்சி நடைபெறும் விஐடி பல்கலைக்கழகத்துக்கு வேலூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களிலிருந்து இலவச பஸ் வசதி செய்யப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தினகரன் நாளிதழ் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் செய்து வருகின்றன. வேலூர் தினகரன்-விஐடி இணைந்து நடத்தும் வெற்றி நமதே நிகழ்ச்சிக்கு ரேடியோ பார்ட்னராக வேலூர் சூரியன் எப்எம் 93.9 உள்ளது.




1 Comments:

  1. Will you conduct this program in other district . If not please upload in youtube . So that many students will get benefits.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive