கொரோனா பரவி வரும் நிலையில், மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,447 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 239 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இன்றுடன் ஊரடங்கு உத்தரவு 18 நாட்கள் நிறைவு பெறுகிறது.
இதனால் அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.வரும் செவ்வாய்க்கிழமையுடன்( இந்த ஊரடங்கு முடிவுக்கு வருவதால் இதை நீட்டிக்கலாமா? இல்லையா? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவிருக்கிறார். கூட்டத்திற்கு பின் மோடி ஊரடங்கு குறித்த தனது முடிவினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அவைபின்வருமாறு..
*தினந்தோறும் வெந்நீரையே பருக வேண்டும்.
*நாள்தோறும் யோகாசனம், பிராணயாமம், தியானம் ஆகியவற்றை 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
*மஞ்சள், சீரகம், கொத்துமல்லி, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி ஊக்குவிக்கும் ஆயுர்வேத நடவடிக்கைகள்:
*நாள்தோறும் காலையில் சையவன்பிராஷ் லேகியம் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும்.நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை இல்லாத சையவன்பிராஷ் லேகியத்தை உட்கொள்ள வேண்டும்.
*துளசி, இலவங்கம், கருமிளகு, சுக்கு, உலர் திராட்சை ஆகியவை கலந்த மூலிகைத் தேநீரை மண்டைவெல்லம் சேர்த்து நாள்தோறும் ஒருமுறையோ ,இருமுறையோ பருக வேண்டும். இதில் எலுமிச்சம்பழச் சாறும் சேர்த்துக்கொள்ளலாம்.
*மஞ்சள் தூள் கலந்த பாலை நாள்தோறும் ஒருமுறையோ இருமுறையோ பருகலாம்.
எளிய ஆயுர்வேத நடைமுறைகள்
*காலையும் மாலையும் 2 மூக்குத் துளைகளில் எள் எண்ணெய் / தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஆகியவற்றைச் சில துளிகள் விடலாம்.
*எண்ணெய் இழுக்கும் சிகிச்சை : ஒரு கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வாயில் வைத்துக்கொண்டு 3 நிமிடங்கள் கழித்துக் கொப்பளிக்க வேண்டும். இதை ஒருநாளைக்கு ஒருமுறையோ இருமுறையோ செய்யலாம்.
வறட்டு இருமல் / தொண்டை புண் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்
*வறட்டு இருமல், தொண்டைவலி இருந்தால் புதினா தழைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம்.
* மண்டைவெல்லம், கருப்பட்டி, தேன் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் கிராம்புத் தூள் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை உட்கொண்டால் இருமல், தொண்டைவலி நீங்கும்.
*இந்த நடவடிக்கைகள் பொதுவாக சாதாரண வறட்டு இருமல் மற்றும் தொண்டை புண்ணுக்கு சிகிச்சை அளிக்கும். இருப்பினும், இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவர்களை அணுகுவது நல்லது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...