++ அரசு பள்ளிகளில் 15 லட்சம் மாணவர்கள் சேர்ந்தனரா? புள்ளி விவரங்களில் குளறுபடி? ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
stu%252Beating

 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 15 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ள எண்ணிக்கை தவறானது என்றும் 10 லட்சத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தாமதமானது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஆகஸ்ட் 22-ம் தேதி 6,9,10,11ஆகிய வகுப்புகளுக்கான  மாணவர் சேர்க்கையும் அதனைதொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை  துவங்கியது.

கொரோனா பாதிப்பால் பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதையடுத்து தனியார் பள்ளிகளிலிருந்து தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் கடந்த ஆண்டுகளைக்காட்டிலும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கும் கூடுதலாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் இதுவரை புதிதாக 15லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறைக்கென பிரத்யேகமாக உள்ள EMIS எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை இணையத்தில் அந்தந்த மாவட்டங்களில் இருந்து பதிவு செய்யப்படும் மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையிலேயே பள்ளிக்கல்வித்துறையும் ,அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் சேர்ந்த எண்ணிக்கை விவரங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கல்வி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி EMIS பக்கத்தில் பதிவு செய்யப்படும் மாணவர் விவரங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

அதனால் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் மாறுபாடு ஏற்ப்பட்டுள்ளதாகவும் தற்போது அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 15 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ள எண்ணிக்கை தவறானது என்றும் 10 லட்சத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டே கல்வி தகவல் மேலாண்மை பக்கத்தில் இருந்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக்கல்வித்துறை ஆவணத்தில் மாணவர்கள் பயிலும்  புள்ளிவிவரங்களில் பல பிழைகள் இருப்பது வெளியாகி மிகுந்த சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து தற்போது கல்வி தகவல் மேலாண்மை பக்கத்திலிருந்து சேகரிக்கப்பட்டுள்ள  மாணவர்கள் சேர்கை விவரங்களிலும் பிழைகள் ஏற்ப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை  சார்ந்த பல்வேறு தகவல்களை கொண்டிருக்கும் இணைய பக்கம் தொடர்ந்து தவறுகளுக்கு இடமளிப்பதாக உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது கல்வி தகவல் மேலாண்மை பக்கத்தில் குளறுபடி உள்ளதை உறுதி செய்துள்ளனர்.

Source : News 18 Tamil

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...