++ எந்த வித கல்லூரி படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது : மத்திய அரசுக்கு தமிழக உயர்கல்வித்துறை கடிதம் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_20200619_080735

புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிற படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு தமிழக உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு குறித்து மாநிலங்கள் ஆராய்ந்து வருகின்றன. இதன் அம்சங்கள் குறித்து தமிழக அரசின் உத்தரவின் பேரில்  முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு பரிசீலனை செய்து வருகிறது.

தற்போது இந்த குழு மத்திய மனிதவள மேம்பாட்டிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் பிளஸ் 2 முடித்து எந்த ஒரு கல்லூரி படிப்பைத் தேர்வு செய்வதற்கும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய கல்வி கொள்கையின் பரிந்துரையை சுட்டிக் காட்டியுள்ளது. இது சரியான பரிந்துரை அல்ல என்றும் எனவே இந்த அம்சத்தை புதிய கல்வி கொள்கையின் இருந்தே நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும் தனது எதிர்ப்பை தமிழக அரசு பதிவு செய்துள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...