அரசு பள்ளிகள் தவிர, தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும், அரசின் உதவி பெறும் பள்ளிகளில், குறிப்பிட்ட அளவு மாணவர்கள் இருந்தால் மட்டுமே, ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் மாணவர்களுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும்.தனியார் பள்ளிகள் சிலவற்றின், கல்வி தரமும், மாணவர் எண்ணிக்கையும் குறையும்போது, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் இடங்களை நீக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதற்காக, சில பள்ளிகள், மாணவர் எண்ணிக்கையை கூடுதலாக காட்டி, வருகைப்பதிவு செய்வதாக புகார்கள் உள்ளன. இதை தடுக்க, மாணவர்களின், 'ஆதார்' எண், பெற்றோர் முகவரி, ரத்தப்பிரிவு உள்ளிட்ட பல அம்சங்களை, 'ஆன்லைனில்' பதிவேற்ற, தொடக்க மற்றும் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த கல்வி ஆண்டில், செப்., 30 வரை சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை, எந்தவித தவறுகளும் இன்றி, 'எமிஸ் ஆன்லைன்' தளத்தில் பதிவேற்றுமாறு, தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், முந்தைய ஆண்டில் இருந்த மாணவர்களின் எண்ணிக்கையையும், தற்போதைய எண்ணிக்கையையும், மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்து, ஆய்வு செய்ய வேண்டும்.போலியாக மாணவர் எண்ணிக்கையை சேர்த்தது தெரிய வந்தால், அந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...